தொண்டி (ஆங்கிலம்:Thondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தின் 7 பேரூராட்சிகளில் ஒன்றாகும். இது திருவாடானை வட்டத்தில் உள்ளது. இது 12 வருவாய் கிராமங்களைக் கொண்டது. இது இராமநாதபுரத்திலிருந்து 44 கி.மீ. தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 58 கி.மீ. தொலைவிலும், தேவக்கோட்டை ரஸ்தா தொடருந்து நிலையத்திலிருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,859 வீடுகளும், 18,465 மக்கள்தொகையும் கொண்டது.[4]
இது 10.5 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 132 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருவாடானை (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
வரலாறு
பாண்டிய மன்னன் இறந்த பிறகு அரியணைக்காக அவரது மகன்கள் குலசேகர பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் போர் புரிந்தனர். அதில் பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டான். இதைக் கேள்விப்பட்ட இலங்கை மன்னன் பராக்கிரம பாபு என்பவன் தன் பெயர் கொண்டவனை கொன்ற பாண்டியனை கொல்லுவதற்கு படை எடுத்து வந்தான். பாண்டிய நாட்டின் பல இடங்களை பிடித்து விட்டான். சுந்தரபாண்டிய மன்னன் சிறப்பாக போர் புரிந்தான். ஆனால் போரில் அவனும் கொல்லப்பட்டான். அவன் இறந்த இடம் இன்று சுந்தர பாண்டியன் பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. இறுதியில் பாண்டியன் சோழர்களின் உதவியை நாடுகிறான். சோழ மன்னன் தன் ஒரு படையை தொண்டிக்கு அனுப்பி பராக்கிரம பாபுவை வென்று பாண்டியனுக்கு நாட்டை மீட்டுதருகிறான். பாண்டிய மன்னன் சோழ மன்னனிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறான் இலங்கை மீண்டும் தன் மீது போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் உங்கள் படைகளை இங்கே காவலுக்கு வேண்டும் என்றான். சோழ மன்னனும் தன் படையை காவலுக்கு வைத்து நாடு திரும்பினான். அந்த படையினர் தான் தொண்டியின் பூர்வீக மக்கள். அவர்கள் படை நடத்தி வந்ததால் படையாட்சி என்றும் அழைக்கப்பட்டார்கள். அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக ஐப்பசி திங்கள் அமாவாசை அன்று மூன்று நாட்கள் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். மூன்று நாள் தீபாவளியாகக் கொண்டாடுவது வேறு எந்த சமூகத்திற்கும் கிடையாது. ஏழு இடங்களில் அவர்கள் படையை நிறுத்தி வைத்தார்கள். தொண்டி, பாசிப் பட்டினம், கோட்டைப் பட்டினம், அம்மா பட்டினம், தேவிப் பட்டினம், ஜெகதாப் பட்டினம், குந்துகால். தொண்டிக்கு நான்கு பெயர்கள் உண்டு. பொன்னகரி, பவித்திரமாணிக்கம், அலை வாய் கரை, தொண்டி ஆகிய பெயர்கள் இதற்கு உண்டு. படையாட்சிகள் காலப்போக்கில் இஸ்லாமியராக மாறியதன் விளைவாகத்தான் தேவிப் பட்டினம், திருப்பாலைக்குடி, தொண்டி, பாசிப் பட்டினம், அம்மாப் பட்டினம் போன்ற ஊர்களில் இஸ்லாமியர்களும் படையாட்சி மக்களும் உறவுமுறை சொல்லி அழைத்துக் கொண்டார்கள்.
ஆதாரங்கள்
தொண்டி பற்றிய சங்ககாலச் செய்திகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.