தொல்லியல் அருங்காட்சியகம், சிறீ சூரியபாகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொல்லியல் அருங்காட்சியகம், சிறீ சூரியபாகர், இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள கோவல்பாரா மாவட்டத்தில் உள்ளது. பிரமபுத்திரா பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள கோவல்பாரா நகரில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறீ சூரியபாகர் என்னும் இடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இப்பகுதியில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட பொருட்களைக் காட்சிக்கு வைப்பதற்காக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இது மூன்று காட்சிக்கூடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சிறீ சூரியபாகரில் பிராமணிய, பௌத்த, சமண மதங்களைச் உரியனவும், கிறித்தவ காலத் தொடக்கத்திலிருந்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதிகளைச் சேர்ந்த பல பாறைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த இரண்டு கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து களிமண், கல் முதலியவற்றால் செய்யப்பட்ட பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றுள் மகிசாசுரமர்த்தனி சிற்பம்; கீர்த்திமுகர், வித்தியாதரர் போன்ற உருவங்கள் செதுக்கிய கட்டிடக் கூறுகளும் குறிப்பிடத் தக்கவை.
Remove ads
மேலும் காண்க
- ஸ்ரீமந்த சங்கர்தேவ் கலாக்ஷேத்திரா
- தொல்லியல் அருங்காட்சியகம், சிறீ சூரியபாகர்
- அசாம் மாநில அருங்காட்சியகம், குவகாத்தி
- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்
- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்
வெளியிணைப்புகள்
- இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணையத்தளத்தில் பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads