இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தொல்பொருள் அருங்காட்சியகம், பிரித்தானிய இந்தியாவின் ஆசிய சமூக நிறுவனத்தினரால், 1814ல் கொல்கத்தா வில்லியம் கோட்டையில் இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் போது நிறுவப்பட்டது.
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குநர் சர் அலெக்சாண்டர் கன்னிங்காம் தலைமையிலான அகழ்வாய்வுவில் கண்டுடெத்த தொல்பொருட்களைக் கொண்டு, சர் ஜான் மார்ஷல் எனும் தொல்லியல் அறிஞர், சாரநாத் (1904), ஆக்ரா (1906), அஜ்மீர் (1908), தில்லி செங்கோட்டை (1909), பிஜப்பூர் (1912), நாளந்தா (1917) மற்றும் சாஞ்சி (1919) போன்ற இடங்களில் பிரித்தானிய இந்திய அரசின் தொல்பொருள் அருங்காட்சியகங்களை அமைத்தார்.
1946ம் ஆண்டு முதல் இந்திய அரசின் இந்தியத் தொல்லியல் துறையில் அருங்காட்சியகப் பிரிவு துவக்கப்பட்டது.
இந்தியத் தொல்லியல் ஆய்வகம், இந்தியாவில் 44 இடங்களில் தொல்பொருட்கள் மற்றும் பண்பாட்டு நினைவுச் சின்னங்களைக் கொண்ட அருங்காட்சியகங்களில் அமைத்துப் பராமரித்து வருகிறது.[1]
இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகப் பிரிவு, வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Remove ads
இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்
- தொல்லியல் அருங்காட்சியகம், சாரநாத், உத்தரப் பிரதேசம்[2]
- தாஜ் அருங்காட்சியகம், உத்தரப் பிரதேசம் [3]
- தொல்லியல் அருங்காட்சியகம், ஐஃகோல், பாகல்கோட் மாவட்டம், கர்நாடகா [4]
- தொல்லியல் அருங்காட்சியகம், அமராவதி, அமராவதி, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் [5]
- தொல்லியல் அருங்காட்சியகம், பாதமி, பாகல்கோட் மாவட்டம்,கர்நாடகா[6]
- தொல்லியல் அருங்காட்சியகம், கோல் கும்பாசுத் தொகுதி, பிஜப்பூர், கர்நாடகா [7]
- தொல்லியல் அருங்காட்சியகம், புத்தகாயா, புத்தகயா, பிகார்[8]
- தொல்லியல் அருங்காட்சியகம், சண்டேரி, அசோக்நகர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்[9]
- தொல்பொருள் அருங்காட்சியகம், புனித ஜார்ஜ் கோட்டை, தமிழ்நாடு [10]
- தொல்பொருள் அருங்காட்சியகம், புராணா கிலா, தில்லி [11]
- டீக் அருங்காட்சியகம், பரத்பூர் மாவட்டம், இராஜஸ்தான் [12]
- இந்தியப் போர் நினைவு அருங்காட்சியகம், செங்கோட்டை, புது தில்லி
- மும்தாசு மகால் அருங்காட்சியகம், செங்கோட்டை, புது தில்லி [13]
- ஸ்வாட்ரராதா செனானி அருங்காட்சியகம், செங்கோட்டை, புதுதில்லி [14]
- இந்திய விடுதலைப் போராட்ட அருங்காட்சியகம், செங்கோட்டை, புது தில்லி[15]
- தொல்லியல் அருங்காட்சியகம், குவாலியர் [16]
- தொல்லியல் அருங்காட்சியகம், ஹளபீடு, ஹளேபீடு, ஹாசன் மாவட்டம், கர்நாடகா[17]
- தொல்லியல் அருங்காட்சியகம், ஹம்பி, ஹம்பி, பெல்லாரி மாவட்டம், கர்நாடகா [18]
- தொல்லியல் அருங்காட்சியகம், சகேசுவர், அல்மோரா மாவட்டம், உத்தரகாண்ட்
- தொல்லியல் அருங்காட்சியகம், கலிபாங்கன், அனுமான்காட் மாவட்டம், இராஜஸ்தான்[19]
- தொல்லியல் அருங்காட்சியகம், காங்ரா, காங்ரா மாவட்டம், இமாசலப் பிரதேசம் [20]
- தொல்லியல் அருங்காட்சியகம், காசுராகோ, மத்தியப் பிரதேசம்[21]
- கோச் பிகார் அரண்மனை அருங்காட்சியகம் மேற்கு வங்காளம்[22]
- மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி, கேரளா[23]
- தொல்லியல் அருங்காட்சியகம், கொனாரக், ஒடிசா [24]
- தொல்லியல் அருங்காட்சியகம், கொண்டாப்பூர், மேடக் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
- 1857 நினைவு அருங்காட்சியகம், லக்னோ, உத்திரப் பிரதேசம் [25]
- தொல்லியல் அருங்காட்சியகம், லோத்தல், குஜராத் [26][27]
- அசர்துவாரி அரண்மனை அருங்காட்சியகம், முர்சிதாபாத், மேற்கு வங்காளம்[28]
- தொல்லியல் அருங்காட்சியகம், நாகார்சுனகொண்டா, ஆந்திரப் பிரதேசம் [29]
- நாளந்தா தொல்லியல் அருங்காட்சியகம், பிகார்[30]
- தொல்லியல் அருங்காட்சியகம், பழைய கோவா, கோவா [31]
- தொல்லியல் அருங்காட்சியகம், சாஞ்சி, மத்தியப் பிரதேசம்[32]
- தொல்லியல் அருங்காட்சியகம், சிறீ சூரியபாகர், அசாம் [33]
- திப்பு சுல்தான் அருங்காட்சியகம், சிறீரங்கப்பட்டினம், கர்நாடகா[34]
- தொல்லியல் அருங்காட்சியகம், தம்லுக், மேற்கு வங்காளம்[35]
- தொல்லியல் அருங்காட்சியகம், தானேசர், அரியானா[36]
- தொல்லியல் அருங்காட்சியகம், ரோப்பார், பஞ்சாப்[37]
- தொல்லியல் அருங்காட்சியகம், வைசாலி, பிகார்[38]
- தொல்லியல் அருங்காட்சியகம், விக்ரம்சீலா, பிகார்[39]
- தொல்லியல் அருங்காட்சியகம், ரத்தினகிரி, ஒடிசா[40]
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads