வேதி வினைக்குழு

From Wikipedia, the free encyclopedia

வேதி வினைக்குழு
Remove ads

கரிம வேதியியலில் வேதி வினைக்குழு அல்லது தொழிற்பாட்டுக் கூட்டம் (இலங்கை வழக்கு) என்பது ஒரு சேர்மம் அது வேதி வினைகளில் பங்குகொள்ளும் பொழுது தொழிற்படும் அச் சேர்மத்தின் பகுதியாக உள்ள ஒரு சில குறிப்பிட்ட அணுக்களைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு ஆக்சிசனும் ஓர் ஐதரசனும் சேர்ந்த OH என்னும் அணுக்கள் ஐதராக்சைல் (hydroxyl) குழு (வேதி வினைக்குழு) எனப்படுகின்றது. இந்த ஐதராக்சைல் குழு பல ஆல்க்கஃகாலில் காணப்படுகின்றது. ஒரு சேர்மத்தின் உள்ள வினைக்குழு, அது இருக்கும் சேர்மத்தின் அளவைப் பொருட்படுத்தாமல், ஒரே மாதிரியான வேதி வினைகளுக்கு உட்படுகின்றன. [1][2]. ஆனால் அது வினைப்படும் திறம் அருகில் உள்ள மற்ற வினைக்குழுக்களைப் பொருத்தும் அமையும்.

Thumb
பென்சைல் அசிட்டேட் (Benzyl acetate) சேர்மம் அதன் ஒரு பகுதியாக எசுத்தர் குழுவை (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது) வினையுறும் குழுவாகக் கொண்டுள்ளது. இவ்வினையுறுங் குழு வேதி வினைக்குழு ஆகும். சேர்மங்களின் பகுதிகளைக் குறிக்கும் மோயிட்டி (moiety) எனப்படுவதும் பல நேரங்களில் வேதி வினைக்குழுவுக்கு ஈடாகக் குறிப்பதுண்டு. ஆனால் மோயிட்டி அல்லது சேர்மப்பகுதி அவ்வளவே. இந்த பென்சைல் அசிட்டேட்டில் அசிட்டைல் பகுதி (அசிட்டைல் மோயிட்டி) பச்சை கோட்டால் சுழித்துக் காட்டப்பட்டுள்ளது. ஆல்க்கஃகால் பகுதி (ஆல்க்கஃகால் மோயிட்டி) ஆரஞ்சு நிறக் கோட்டால் சுழித்துக் காட்டப்பட்டுள்ளது.

மோயிட்டி (moiety) என்று ஒரு கலைச்சொல்லும் அடிக்கடி இந்த வேதி வினைக்குழுவுக்கு ஈடாகப் பயன்பாடுகின்றது, ஆனால் மோயிட்டி என்னும் சொல் ஒரு சேர்மத்தின் ஒரு பகுதி என்பது மட்டுமே. ஐயுபிஏசி(IUPAC)யின் வரையறையின்,[3] படி மோயிட்டி என்பது ஒரு சேர்மத்தின் பாதி. இதில் அதன் உள் அமைப்புகளும், வேதி வினைக்குழுக்களும் அடங்கும். எடுத்துக்காட்டாக ஒரு எசுத்தரை இரு பகுதிகளாக (மோயிட்டிகளாக) பிரிக்கலாம் - ஆல்க்கஃகால் மோயிட்டி (alcohol moiety), அசைல் மோயிட்டி (acyl moiety), ஆனால் எசுத்தர் வினைக்குழு கொண்டுள்ளது. ஈடாக வேறு விதமாக எண்ணினால், கார்பாக்சலேட் (carboxylate), ஆல்க்கைல் (alkyl) மோயிட்டிகளாகப் பிரிக்கலாம்.

வேதி வினைக்குழுக்களின் பெயர்களை அதற்கான ஆல்க்கேன்களின் பெயர்களோடு இணைத்து பெயர் சூட்டும்பொழுது கரிமச் சேர்மங்களின் பெயர்களை முறைப்படி பெயரிட ஒரு நல்ல முறை கிட்டுகின்றது.

கரிம வேதியியலில் வினைக்குழு இணைந்துள்ள கரிம அணுவுக்கு அடுத்த முதல் கரிம அணுவுக்கு ஆல்ஃவா (alpha) கரிமம் அல்லது முதல் கரிமம் என்று பெயர். அடுத்த கரிம அணுவுக்கு பீட்டா அல்லது இரண்டாவது கரிமம், அதற்கு அடுத்த கரிம அணு காமா கரிமம் அல்லது மூன்றாவது கரிமம் என்னும் வகையில் கிரேக்க எழுத்துகளால்பெயரிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக காமா-அமினோபியூடானாயிக் காடி (gamma-aminobutanoic acid) என்பதில் காமா-அமைன் (gamma-amine) என்பது கார்பாக்சைலிக் காடிக் குழுவுடன் இணைந்திருக்கும் கரிம சட்டத்தில் உள்ள மூன்றாவது கரிம அணுவில் (காமா கரிமம்) இணைந்திருப்பது.

Remove ads

வழக்கமாகக் காணப்படும் வேதி வினைக்குழுக்களின் அட்டவணை

கீழ்க்காணும் அட்டவணையில் பொதுவாகக் காணப்படும் வேதி வினைக்குழுக்களைக் காணலாம். இவற்றில் உள்ள வாய்பாட்டில் R, R' என்னும் குறிகள் இணைக்கப்பட்ட ஐதரசனையோ ஐதரோகார்பன் கிளைச் சங்கிலியையோ குறிக்கும் ஆனால் ஒருசில நேரங்களில் வேறு சில அணுக்கூட்டங்களையும் குறிக்கும்.

ஐதரோகார்பன்கள்

π பிணைப்புகளின் (பை-பிணைப்புகளின்) எண்ணிக்கையும் அடுக்கையும் பொருத்து வேதியியல் வினைகள் மாறும். கீழுள்ள அட்டவனையில் C-H (கரிம-ஐதரச) பிணைப்புகள் கொண்டுள்ளவை காட்டப்பட்டுள்ளன, ஆனால் அவை ஒவ்வொன்றும் வினையுறும் தன்மையும் தரமும் மாறக்கூடியது.

மேலதிகத் தகவல்கள் வேதி வகுப்பு Chemical class, குழு Group ...
Remove ads

ஆக்சிசன் உள்ள வேதி வினைக்குழுக்கள்

கரிம-ஆக்சிசன் (C-O) பிணைப்புகள் கொண்ட குழுக்களில் அவற்றின் வேதியியல் வினையுறும் தன்மை அவை எங்கு அமைந்துள்ளது என்பதைப் பொருத்தும், எதிர்மின்னி வலயக் கலப்பைப் (orbital hybridization) பொருத்தும் அமையும்.

மேலதிகத் தகவல்கள் வேதி வகுப்பு Chemical class, குழு Group ...
Remove ads

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads