தொழுகை (இசுலாம்)

From Wikipedia, the free encyclopedia

தொழுகை (இசுலாம்)
Remove ads

தொழுகை (Salah அல்லது Salat, அரபி: ٱلصَّلَاة அஸ்ஸலாஹ், அரபி: ٱلصَّلَوَات[1]) அரபுகளில்லாத முசுலிம்களால் நமாஸ் (Namāz) எனவும் அழைக்கப்படுகிறது[2] இசுலாமிய நம்பிக்கையில் முசுலிம்களுக்கான தினசரிக் கட்டாய வழிபாடுகளில் குறிப்பிடப்படும் ஐந்து தூண்களில் இரண்டாவது ஆகும். இது ஒரு உடல், மன, ஆன்மிக வழிபாடாகும். தொழுகையானது ஒவ்வொரு நாளும் ஐந்து தடவைகள் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் அனுசரிக்கப்படுகிறது. மக்காவில் உள்ள கஃபாவை நோக்கி வழிபடும்போது,[3] முசுலிம்கள் முதலில் நின்று, பின்னர் மண்டியிட்டு அல்லது தரையில் உட்கார்ந்து, குர்ஆனிலிருந்து பாராயணம் செய்து, கடவுளை வணங்குகிறார்கள். தொழுகையின் போது அணியும் ஆடைகளும் தொழுகை செய்யும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். தொழுகையின்போது, ஆண்களும் பெண்களும் தொய்வான ஆடைகளால் தங்கள் உடல்முழுதும் மூடியிருக்க வேண்டும். பெண்கள் தலையை மறைக்க வேண்டும். ஆண்கள் குல்லா அணிவதும் வழக்கமாகும். இசுலாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது.

Thumb
தொழுகை

தொழுகையானது பல தடவைகள் குனிவதும், சிரம் பணிந்த சுழற்சிகளாலும் ஆனது, இது ரக்கா எனப்படும் பரிந்துரைக்கப்பட்ட அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ரக்காக்களின் எண்ணிக்கை நாள் நேரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

எந்த எந்தத் தொழுகையை எந்த எந்த நபி முதலில் தொழுதார்கள்:

  1. பஜ்ர் - ஆதம் (அலை)
  2. ழுஹர் - இப்ராஹீம் (அலை)
  3. அஸர் - யாகூப் (அலை)
  4. மஃரிப் - தாவூது (அலை)
  5. இஷா - யூனுஸ் (அலை)

தொழுகையில் பஜ்ர் அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னும், ளுஹர் என்பது மதியம் சூரியன் உச்சி சாய்ந்ததும், அஸர் என்பது மாலை நிழல் இரு மடங்காக உயரும் போதும், மஃரிப் என்பது சூரியன் அஸ்தமனம் ஆன உடனும், இஷா என்பது இரவு ஆரம்பமானதும் நடைபெறுவதாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads