தோடகொப்பலு காரியப்பா இரவி

From Wikipedia, the free encyclopedia

தோடகொப்பலு காரியப்பா இரவி
Remove ads

தோடகொப்பலு காரியப்பா இரவிக்குமார் (10 ஜூன் 1979 – 16 மார்ச் 2015) ஒரு இந்திய ஆட்சிப்பணியாளராக இருந்தவர். இவர் கர்நாடக அரசாங்கத்தில் கூடுதல் வரி வசூல் ஆணையராக பணிபுரிந்து வந்தார். 16, மார்ச் 2015-ல் மர்மமான முறையில் இவரது இல்லத்தில் இறந்தார்.[1]

விரைவான உண்மைகள் தோ. கா. இரவிக்குமார், கூடுதல் வரி வசூல் ஆணையர், கர்நாடக அரசாங்கம் ...
Remove ads

பிறப்பு

1979-ம் ஆண்டு ஜூன் 10-ம் நாள், தும்கூர் மாவட்டத்தில் கரியப்பா, குருவம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்த இரவிக்குமாருக்கு இரமேஷ் என்ற சகோதரரும், பாரதி என்ற சகோதரியும் உள்ளனர். [2]

பணி

2011-ம் ஆண்டு முதல் 2013 வரை குல்பர்காவில் கூடுதல் ஆணையராகவும், ஆகத்து 2013 முதல் அக்டோபர் 2014 வரை கோலார் மாவட்ட ஆட்சியாளராகவும் பணி புரிந்தார். இவரது பணிக்காலத்தில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்தார். [3] இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2014-ல் பெங்களூக்கு கூடுதல் வரிவசூல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் வரி ஏய்ப்பு மற்றும் நிலுவையிலிருந்த ரூ.140 கோடி தொகையை கட்டுமானர்களிடம் இருந்து வசூலித்தார், அதன் காரணமாக சில மிரட்டல்களும் அவருக்கு வந்தன.[4][5]

Remove ads

இறப்பு

2015-ம் ஆண்டு மார்ச் 16-ம் நாள், இரவிக்குமார் கோரமங்கலாவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தூக்கில் தொங்கினார். ஆரம்ப பரிசோதனையில் இவரது இறப்பில் மர்மம் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. இவரது இறப்பைக் கண்டித்து கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.

இவர் இறப்பதற்கு முன்பாக, வரி ஏய்ப்பு செய்ததாகச் சில பிரபலங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads