தோமஸ் முன்ரோ

From Wikipedia, the free encyclopedia

தோமஸ் முன்ரோ
Remove ads
விரைவான உண்மைகள் சிறு நாயகம் (Major-General)தோமஸ் முன்ரோ பிரபுKCB, சென்னை மாகாண ஆளுநர் ...
Remove ads

பிறப்பு

கிளாஸ்கோ நகரில் 27.05.1761 அன்று மன்றோ பிறந்தார். நான்கு சகோதரர்களையும் இரண்டு சகோதரிகளையும் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. தந்தை அலெக்ஸாண்டர் மன்றோ. தாய் மார்கரெட் ஸ்டார்க்.

வாழ்க்கைக் குறிப்பு

  • 1789 அவர் சென்னையில் உள்ள ஒரு காலாட்படையில் பயிற்சி அலுவலராக நியமிக்கப்பட்டார்
  • 1780-83 அவர் ஹைதர் அலிக்கு எதிரான போரில் பங்கேற்றார்
  • 1790-92 திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் பங்கேற்றார், பின்னர் பாரமால் பகுதியின் ராணுவ அதிகாரியாக ஏழு வருடம் பணியாற்றி வருவாய் ஆய்வு மற்றும் மதிப்பீடு கொள்கைகளை கற்றார்
  • 1800-1807 ஹைதராபாத் நிசாம் பகுதிக்களுக்கு பொறுப்பாளராக இருந்தார், பின்பு இங்கிலாந்து சென்றார்
  • 1814 இந்திய திரும்பிய அவர் நீதிதுறை மற்றும் காவல்துறை சீரமைப்பில் ஈடுபட்டார்
  • 1820ல் சென்னை, கவர்னராக நியமிக்கப்பட்டார். அவரால் நிறுவப்பட்ட வருவாய் மதிப்பீடு மற்றும் நிர்வாகத்தின் அமைப்புகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன
Remove ads

சிறப்பு

இவருக்கு சென்னையின் அண்ணா சாலையில் தீவுத் திடல் அருகே சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. சேணம் இல்லாத குதிரை மீது கம்பீரமாக மன்றோ அமர்ந்து இருக்கின்ற அந்தச் சிலையைச் செய்தவர் பிரான்சிஸ் சாண்டரி. அவர் ரயாட்வாரி நிலவரி அமைப்பின் தந்தை என கருதப்படுகிறார்.

Thumb
தோமஸ் முன்ரோ சிலை

முக்கிய நிகழ்வுகள்

1800ல் பெல்லாரி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் ஆக பணி புரியும் போது மதராஸ் அரசாங்கம் ராகவேந்திரர் மடத்திலிருந்தும் மற்றும் மந்த்ராலயத்திலிருந்தும் வரும் வருவாயை அரசுக்கு அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அப்போது அது குறித்த விசாரணைக்காக அங்கு சென்ற போது ராகவேந்திரர் அவரிடம் பேசியதாகவும் அவருக்கு தீட்சை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் தனது அறிக்கையை மடத்திற்கு சாதகமாக வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.[2]. இந்த ஆணை இன்றும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் மந்த்ராலயத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Remove ads

நூல் மற்றும் வெளியிணைப்பு மேற்கோள்கள்

  • கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன்
  • எனது இந்தியா ( காட்டன் காட்டிய அக்கறை! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்.
  • கனவு நனவான கதை[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads