மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் (9 திசம்பர் 1754 – 28 நவம்பர் 1826) வெல்லெசுலி பிரபுவைத் தொடர்ந்து ( அதாவது, ஹேஸ்டிங்ஸ் பிரபு என்றழைக்கப்பட்ட மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ்) என்பவர், கி.பி.1813முதல் கி.பி1823 வரை வங்களத்தின் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்று ஆட்சி செலுத்தினார். வெல்லெசுலியின் பணியினை இவர் நிறைவு செய்தார். இவர் காலத்தில் நேபாளத்தைச் சார்ந்த கூர்க்கர் பிண்டாரிகள்,மராத்தியர்கள் போன்றோர் பிரித்தானிய இந்தியாவின் ஆங்கிலப் பேரரசை அகற்ற எண்ணினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அனைத்து அறைகூவல்களையும் ஹேஸ்டிங்ஸ் திறமையுடன் சமாளித்து ஆங்கில அரசாட்சியை இந்தியாவில் நிலைபெறச் செய்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில் பட்டயச் சட்டம் ஆங்கில அரசால் நிறைவேற்றப்பட்டது.

Remove ads

பட்டயச் சட்டத்தின் முதன்மைக் கூறுகள்

ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக உரிமம் 20 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. இந்தியாவுடனான வணிக உறவு ஆங்கிலேய வனிகர்களுக்குத் திறந்து விடப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகத் தனி உரிமை இரத்தானது. இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் ரூபாய் ஒரு லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்தியாவில் வாழும் ஐரோப்பியர் சமயநலன் காக்க கிறித்துவப் பேராயர்கள் அமர்த்தப்பட்டனர். ஆங்கில நாட்டு வணிகர்களும், மதப் போதகர்களும் கட்டுப்பட்டு வாரியத்தின் அனுமதியோடு இந்தியாவில் வாழ இசைவு தரப்படனர். இறுதியாக, ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகத் தனி உரிமை முடிவுக்கு வந்தது. கிறித்துவச் சமயப் போதகர்கள், தங்கள் சமயத்தைப் பரப்புவதற்கு ஒப்புதல் பெற்றனர்.

Remove ads

ஆங்கிலேய-நேபாளப் போர் (கி.பி.1814-கி.பி.1816)

Thumb
சுகௌலி ஒப்பந்தத்தின் விளைவாக நேபாளம், இந்தியா நிலப்பரப்புகளில் ஏற்பட்ட மாறுதல்கள்

நேபாளிகள் 1814-இல் கார்வால் கோட்டம் குமாவுன் கோட்டம், சிக்கிம், டார்ஜீலிங் பகுதிகளைக் கைப்பற்றினர். ஆங்கிலேயர் இதனை அறைகூவலாக எற்றுக்கொண்டு கூர்க்கர் இனத்தலைவர் அமர்சிங்கைத் 1814-1816 ஆங்கிலேய-நேபாளப் போரில் வென்றனர். 1816-ஆம் ஆண்டு மார்ச்சில் கூர்க்கர்கள், ஆங்கிலேயர்களோடு சுகௌலி உடன்படிக்கையின் படி [1] நேபாளிகள் வென்ற பகுதிகள் அனைத்தையும் மீண்டும் இந்தியாவிற்குத் திருப்பிக் கொடுத்தனர்.

Remove ads

பிண்டாரிகளுடன் போர் (கி.பி.1816-கி.பி.1818)

பிண்டாரிகள் மத்திய இந்தியாவில் வாழ்ந்த கொள்கைக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். அமிர்கான், வாசில் முகமது, கரிம்கான், சேட்டு போன்றவர்கள் பிண்டாரிகளின் தலைவர்கள் ஆவர்.தலைமை ஆளுநர் ஹேஸ்டிங்ஸ் ஒரு பெரும் ஆங்கிலப் படையைப் பிண்டாரிகளுக்கு எதிராக அனுப்பி அவர்களைத் தோற்கடித்தார்.இவ்வாறு ஹேஸ்டிங்ஸ் பிண்டாரிகளின் கொடுஞ்செயலை ஒழித்து மத்திய இந்தியாவில் வாழும் மக்களைக் காப்பற்றினார்.

மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர் (1817- 1818)

ஆங்கிலேயர்களின் அதிகார வளர்ச்சி மராத்தியர்களுக்குப் பொறாமையாக அமைந்தது. எனவே மராத்தியப் பேரரசின் பேஷ்வா தளபதிகளை ஒன்றிணைத்து மராத்தியக் கூட்டமைப்பை ஆங்கிலேயர்களுக்கு எதிராக அமைத்தார். பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் கி.பி.1817 ஆம் ஆண்டின் இறுதியில் பூனாவிலிருந்த ஆங்கிலப் பேராளரைக் கொலை செய்தார். இது மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்கு வழிவகுத்தது. போரின் முடிவில் மராத்தியர்களை வென்ற ஆங்கிலேயர்கள் முமு வெற்றியைப் பெற்றனர். மராத்திய நிலப் பகுதியில் சதாரா இராச்சியம் என்ற சிற்றரசை உருவாக்கிச் சத்ரபதி சிவாஜியின் போன்சலே வம்சத்தின் பிரதாப் சிங்கை அரசராக ஆங்கில அரசு பிரகடனப் படுத்தியது. வலிமை மிகுந்த மராத்தியப் பேரரசு தனது அதிகாரத்தை இழந்தது. ஆங்கில அரசு இந்தியவில் தனது வலிமை மிகுந்த பேரரசினை உருவாக்கியது.

Remove ads

மேற்கோள்கள்

தகவல் வாயில்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads