த ஆர்ட்டிஸ்ட் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

த ஆர்ட்டிஸ்ட் (திரைப்படம்)
Remove ads

த ஆர்ட்டிஸ்ட் (The Artist) 2011ஆம் ஆண்டு வெளியான ஓர் பிரெஞ்சு[1] காதல் திரைப்படமாகும். இதனை மிஷேல் ஹசானவிசியஸ் இயக்க, யான் துயார்டன், பெரெனீசு பெஜோ நடித்துள்ளனர். கதைக்களமாக ஒலியில்லா திரைப்படங்களிலிருந்து பேசும் திரைப்படங்கள் வரத் துவங்கியிருந்த 1927 - 1932 காலகட்ட ஆலிவுட் சூழலில் ஒலியில்லாத் திரைப்படங்களில் நடித்திருந்த ஓர் வயதான நடிகருக்கும் வளரும் இளைய நடிகைக்கும் இடையே நிலவும் உறவை மையப்படுத்தி உள்ளது. திரைப்படத்தின் பெரும்பகுதி ஒலியின்றியே எடுக்கப்பட்டுள்ளது; கருப்பு-வெள்ளைத் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.திரை விமரிசகர்களிடமிருந்து பாராட்டுகளையும் பல விருதுகளையும் பெற்று வருகிறது. முதன்முதலாக திரையிடப்பட்ட 2011 கான் திரைப்பட விழாவில் கதாநாயகன் துயார்டன் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார்.

Thumb Thumb
யான் துயார்டனும் பெரெனீசு பெஜோவும் 2011 கான் திரைப்பட விழாவில்
விரைவான உண்மைகள் த ஆர்ட்டிஸ்ட், இயக்கம் ...

இத்திரைப்படம் ஆறு கோல்டன் குளோப்களுக்கு நியமிக்கப்பட்டு (2011 திரைப்படங்களில் மிகக் கூடுதலானது) மூன்றில் விருது பெற்றுள்ளது; இசை அல்லது நகைச்சுவைத் திரைப்பட வகையில் சிறந்த படம், சிறந்த பின்னணி இசை, இசை அல்லது நகைச்சுவைத் திரைப்பட வகையில் சிறந்த நடிகர் (துயார்டன்). சனவரி 2012இல் இந்தத் திரைப்படம் பன்னிரெண்டு பாஃப்டாகளுக்கு நியமிக்கப்பட்டு, திரும்பவும் 2011 திரைப்படங்களில் மிகக் கூடுதலானது,[2] ஏழு விருதுகளை வென்றுள்ளது. இவற்றில் முக்கியமானவை சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (துயார்டன்),சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதை (ஹசானவிசியஸ்) ஆகும். இந்த ஆண்டு பத்து அகாதமி விருதுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.[3] 84வது அகாதமி விருது நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கினர், சிறந்த நடிகர் உட்ட ஐந்து விருதுகளைப் பெற்றது. பிரான்சில் பத்து சீசர் விருதுகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளது.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads