நகர்பேசி இயங்குதளம்

From Wikipedia, the free encyclopedia

நகர்பேசி இயங்குதளம்
Remove ads

நகர்பேசி இயங்குதளம்(ஆங்கிலம்:Mobile OS/Mobile Operating System) அடிப்படையான வசதிகளையுடைய நகர்பேசி, நுண்ணறி பேசி, கைக்கணினி (அ) குளிகைக்கணினி(tablet), தனிநபர் எண்மத்துணை(PDA) போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளம் ஆகும். பலவகையான திறனுடைய நகர்பேசி இயங்குதளங்கள் தற்போது புழக்கத்திலுள்ளன. நவீனகால நகர்பேசி இயங்குதளங்கள் மேசைக்கணினிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளங்கள் தரும் வசதிகளான தொடுதிரை, புளூடூத், ஒய்-ஃபை(Wi-Fi), புவியிடங்காட்டி(GPS), ஒளிப்படக்கருவி(Camera), பேச்சுணரி போன்ற வசதிகளை தருமளவுக்கு திறனுடையதாக இருக்கின்றன.

Thumb
Google Android
Remove ads

இயல்புகள்

கணிப்பொறி போல அல்லாமல் நகர்பேசி இயக்குதள கட்டமைப்பு குறிப்பிடத்தக்க மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது.

மின்சக்தி பயன்பாடு: இவை மீன்கலன்களால் சக்தியூட்டபடுவதால் இதன் கருவகம் மின்சக்தியை வீணடிக்காமல் இயங்கும் வகையில் உருவமைக்கப்படுகிறது

நகர்பேசி இயக்குதளங்கள் பட்டியல்

  • ஆன்ட்ராய்ட்
  • ஐ.ஓ.எஸ்
  • விண்டோஸ் ஃபோன் / விண்டோஸ் மொபைல்
  • சையில்ஃபிஷ்
  • உபுண்டு டச்
  • சிம்பியன்
  • பயர் பாக்சு மொபைல்
  • வெப் ஓஎஸ்
  • ஆர்.ஐ.எம் (பிளாக்பெர்ரி)
  • படா (சாம்சங்)
  • தைசென் (சாம்சங்)

பரவலாக பயன்படுத்தப்படும் நகர்பேசி இயங்குதளங்கள்

நோக்கியா நிறுவனத்தின் சிம்பியன் இயங்குதளம்
சிம்பியன் இயங்குதளம்தான் நகர்பேசிகளில் மிக அதிக பயன்படுத்தப்படும் இயங்குதளம். நோக்கியா நிறுவனம் தயாரிக்கும் அத்தனை வகையான நகர்பேசிகளும் சிம்பியன் இயங்குதளத்தை கொண்டுள்ளன.
கூகிள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம்
ஆண்ட்ராய்டு என்ற ஒரு சிறிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம், பின்னர் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டுவருகிறது. ஆப்பிள் மற்றும் விண்டோஸ் நுண்ணறிபேசிகளை தவிர்த்த மற்ற சோனி, சாம்சங், எச்டிசி, மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் நுண்ணறிபேசிகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையே பயன்படுத்துகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளம்
ஆப்பிளின் ஐஃபோன்களில் மட்டும் இந்த ஐஓஎஸ் பயன்படுத்தப்படுகிறது.
பிளாக்பெரி நிறுவனத்தின் பிளாக்பெரி இயங்குதளம்
ரிம்(RIM) என சுருக்கமாக அழைக்கப்டும் ரிசர்ச் இன் மோஷன்(Research In Motion) நிறுவனம் தயாரிக்கும் அனைத்து பிளாக்பெரி நகர்பேசிகளும் இந்த இயங்குதளத்தையே பயன்படுத்துகின்றன.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஃபோன் இயங்குதளம்
சாம்சங் நிறுவனத்தின் படா இயங்குதளம்

நகர்பேசி இயங்குதளங்களின் சந்தை ஒப்பீடு

Thumb
தகவலுக்கு கீழே இருக்கும் அட்டவணையை பார்க்கவும்
Thumb
தகவலுக்கு கீழே இருக்கும் அட்டவணையை பார்க்கவும்
மேலதிகத் தகவல்கள் காலாண்டு, விண்டோஸ் மொபைல் ...
மேலதிகத் தகவல்கள் காலாண்டு, விண்டோஸ் மொபைல் ...
மேலதிகத் தகவல்கள் காலாண்டு, ஆண்ட்ராய்டு ...
Remove ads

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads