நகர மண்டபம், சிங்கப்பூர்

From Wikipedia, the free encyclopedia

நகர மண்டபம், சிங்கப்பூர்
Remove ads

சிங்கப்பூர் நகர மண்டபம், சிங்கப்பூரின் தேசிய இடமாக அறிவிக்கப்பட்ட கட்டிடங்களில் ஒன்று.. வரலாற்றுச் சிறப்புமிக்க படாங், சிங்கப்பூர் உச்சநீதிமன்றம் ஆகியவை அருகில் அமைந்துள்ளன.

Thumb
நகர மண்டபம்
Thumb
வான்வழிக் காட்சி

வரலாறு

நகர மண்டபம் 1926 முதல் 1929 ஆம் ஆண்டுவரை கட்டப்பட்டு முதன்மை வளாகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில், ஜப்பானியர்கள் தங்கள் செயல்பாடுகளை இவ்வளாகத்திலேயே செய்து கொண்டனர். 1943 ஆம் ஆண்டில், இந்திய தேசிய ராணுவத்தின் தலைவராய் இருந்த சுபாசு சந்திரபோசு, இந்தியா பிரித்தானியரிடமிருந்து விடுதலை அடைய வேண்டும் என்று பேரணி நடத்தினார். போரின் முடிவில், ஜப்பானிய இராணுவத் தளபதி, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் சரணடைந்தார். பின்னர் இக்கட்டிடம் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது. சிங்கப்பூருக்கு நகர அந்தஸ்து வழங்கப்பட்டது. தன்னாட்சிக் காலத்தின்போது, அதிபர் லீ குவான் யீ, இவரது எட்டு அமைச்சர்கள் ஆகியோர் இவ்வளாகத்திலேயே ஆட்சிப் பொறுப்பேற்றனர். சிங்கப்பூரின் அரசரான யுசூப் பின் இசாக் என்பாரும் இங்குதான் உறுதிமொழியேற்றார். அரசுப் பணிகளை மேற்கொள்வதற்காக, 1987 ஆம் ஆண்டில் இக்கட்டிடம் பெரிதும் மேம்படுத்தப்பட்டது 1988 ஆம் ஆண்டில், 12 நீதிமன்ற அறைகள் அருகிலுள்ள உச்சனீதிமன்றதுக்கு மாற்றப்பட்டன. இங்கு சிங்கப்பூரின் அரையாண்டுக் கூட்டம், உலக வங்கிக்கான சந்திப்பு, பன்னாட்டு நிதியமைப்புக்கான கூட்டம் உட்பட முக்கியக் கூட்டங்கள் நிகழும்.[1][2]

2015 ஆம் ஆண்டிற்குள் அருகிலுள்ள உச்சநீதிமன்ற வளாகமும், நகர மண்டபமும் தேசிய கலை காட்சியகமாக மாற்றப்படும்.

Remove ads

மேலும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

விரைவான உண்மைகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads