நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி

From Wikipedia, the free encyclopedia

நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி
Remove ads

நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி, இந்தியாவின் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் மாநில மற்றும் நடுவண் அரசிற்கு எதிராக நக்சலைட்டுமாவோயிஸ்ட் போராளிகளின் தொடரும் பிணக்குகளைக் குறிக்கிறது.[11]

விரைவான உண்மைகள் நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி, நாள் ...

நக்சல்பாரி இயக்கத்தின் தொடர்ச்சியாக, 2004ல் பிளவு பட்ட மாவோயிஸ்ட் போராளிக் குழுக்கள், மக்கள் யுத்தக் குழு மற்றும் மாவோயிஸ்ட் பொதுவுடமை மையம் என்ற பெயர்களில் ஒன்றிணைந்தனர்.

மாவோயிஸ்ட் கைதிகளை சிறையிலிருந்து விடுவிப்பதற்கும், வேளாண் நிலங்களை மறு விநியோகம் செய்வது தொடர்பாக, சனவரி, 2005ல் ஆந்திரப் பிரதேச அரசிற்கும் - மாவோயிஸ்ட் போராளிகளின் குழுவிற்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.[12] 2005 முதல் நக்சலைட்டு-மாவோயிஸ்ட் இயக்கம் இந்தியாவின் 29 மாநிலங்களில் பரவியது. போராளிகளை ஒடுக்க காவல்துறைக்கும், போராளிகளுக்கும் இடையே நடந்த மோதல்களில் ஆண்டுதோறும் இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டது.[13][13][14]

நக்சலைட்டு-மாவோயிஸ்ட் இயக்கத்தின் 6,500 முதல் 9,500 முடிய இருந்த ஆயுதம் தாங்கிய போராளிகள், தங்களை மக்கள் விடுதலை கொரில்லாப் படை என அழைத்துக் கொண்டனர்.[15]

நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகள் அதிகம் நடமாடும் பகுதிகள் சிவப்பு தாழ்வாரம் என அழைக்கப்பட்டது. பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின், குறிப்பாக பழங்குடி மக்கள் அதிகம் வாழும் காடும் மலையும் சார்ந்த பகுதிகளில் நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகள் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் பரவியிருந்தனர்[15] மேலும் ஏழ்மை நிலையில் இங்கு வாழும் பழங்குடி மக்களின், வாழ்வாதாரங்களை சுரண்டும் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை எதிர்ப்பதாக கூறிக்கொள்கின்றனர்.[16]

ஒன்றிணைந்த ஆந்திரப்பிரதேசத்தின் 58% பொதுமக்களின் கருத்துக் கணிப்புப் படி, 18% பொதுமக்கள் மட்டுமே மாவோயிஸ்ட் ஆயுதந் தாங்கிய போராளிகளுக்கு எதிராக இருந்தனர்.[17] விவசாய கூலித்தொழிலாளர்களின் நில உரிமைகளுக்காகவும், வேலை வாய்ப்புகளுக்காகவும் நக்சலைட்டுகள் அடிக்கடி, அரசு ஊழியர்கள் மீதும், காவல் துறையினர் மீதும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தினர்.[18] அரசிற்கு எதிராக ஆயுதம் தாங்கிய கிராமப்புற மக்கள், தங்களின் எழுச்சிக்காக கடைபிடிக்கும் மூலோபாயத்தை பின்பற்றுகிறார்கள் என நக்சலைட்டுகள் கூறுகின்றனர்.[19]

பிப்ரவரி 2009ல் இந்திய அரசு, சிவப்பு தாழ்வாரப் பகுதிகள் செயல்படும் நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகளை ஒடுக்க, தேசிய அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் மற்றும் விவசாயக் கூலிகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டங்களையும், நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகளின் ஆதிக்கத்தை குறைக்க, இப்பகுதியில் சிறப்புக் காவல் படைகளுக்கு அதிக நிதியுதவி ஒதுக்கி வழங்கியது.[20][21]

ஒருங்கிணைந்த நடவடிக்கை திட்டத்தால், ஆகஸ்டு 2010க்குப் பிறகு கர்நாடகா மாநிலத்தை சிவப்பு தாழ்வாரப் பகுதிகளிலிருந்து நீக்கப்பட்டது [22] சூலை 2011இல் ஒன்பது இந்திய மாநிலங்களில் 83 மாவட்டங்கள் மட்டும் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட அறிவிக்கப்பட்டது [23][24][25] டிசம்பர் 2011இல், நக்சலைட்டு-மாவோயிஸ்ட் தாக்குதல்களால் இறந்தவர்கள் மற்றும் காயப்பட்டோர் எண்ணிக்கை ஏறக்குறைய 50% ஆக குறைந்தது அரசு அறிவித்துள்ளது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads