நக்சல்பாரி இயக்கம், இந்தியா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நக்சல்பாரி இயக்கம், 1967 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் ஜல்பைகுரி கோட்டத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி என்ற கிராமத்தில், 25 மே 1967ஆம் ஆண்டில் எட்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட பதினோரு பேர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.[1]

அதைத் தொடர்ந்து கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் போராட்டம் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை முன்வைத்து, சாரு மசூம்தார்[2] மற்றும் கானு சன்யால் ஆகியோர் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் பரவியது.

மேற்கு வங்காளத்தில் துவங்கிய நக்சல்பாரி இயக்கத்தின் தாக்கம் கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டிலும் பரவியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் முதலில் நக்சல்பாரி அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டனர்.

ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்தி இந்தியாவில் பொதுவுடமையை நிலைநாட்டுவதென்பதே தமது நோக்கம் என நக்ஸல்பாரி இயக்கத்தவர் அறிவித்துக்கொண்டனர். நடைமுறையிலிருக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாத நக்சபாரி இயக்கத்தினர், தேர்தல் பாதை, திருடர் பாதை என்று விமர்சித்தனர்.

Remove ads

நக்சல்பாரி இயக்கத்தில் பிளவு

நக்சல்பாரி இயக்கத்தின் ஒரு பிரிவினர் தேர்தல்களில் போட்டியிடுவதை ஏற்றுக்கொண்டவர்கள், சிபிஐ எம்எல் என்ற பெயரிலும், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையைக்கொண்ட பல்வேறு பிரிவுகள் மாவோயிஸ்ட் என்ற பெயரிலும் இரண்டாக பிளவுபட்டு செயல்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் நக்சல்பாரி இயக்கம்

மேற்கு வங்காளத்தில் 1967ல் நக்சல்பாரி போராட்டம் வெடித்தபோது, தமிழ்நாட்டில் கோவை மற்றும் தஞ்சைப் பகுதிகளில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியது.

நக்சல்பாரி இயக்கத்திற்கு புத்துயிரூட்டிய நெருக்கடி நிலை

இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி 25 சூன் 1975ல் அறிவித்த நெருக்கடி நிலையால் தமிழ்நாட்டில் நக்ஸல்பாரி இயக்கும் புத்துயிர் பெற்று, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைக் களமாகக்கொண்டு செயல்படத் தொடங்கியது.

கீழ்வெண்மணி சம்பவத்தில் நக்ஸல்பாரிகள்

கூலி உயர்வு கேட்டதற்காக கீழவெண்மணி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட வேளாண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையைத் தந்தவர்கள் நக்ஸல்பாரி இயக்கத்தினர்.[3]

Remove ads

நக்சல்பாரி இயக்கத்தின் வளர்ச்சி

நக்சல்பாரி இயக்கத்தின் வளர்ச்சியால் இந்தியாவில் குறிப்பாக பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கும் பெரிதும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் பகுதிகளை சிவப்பு தாழ்வாரம் எனப்படுகிறது.[4][5][6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads