நச்சுப்பொருள்

From Wikipedia, the free encyclopedia

நச்சுப்பொருள்
Remove ads

நச்சுப்பொருள் (Toxin) என்பது உயிருள்ள உயிரணுக்கள், அல்லது உயிரினங்களால் உருவாக்கப்படும் நஞ்சு பதார்த்தங்கள் ஆகும்[1][2]. இருப்பினும், மனிதன் ஒரு உயிரினமாக இருந்தபோதிலும், மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படும் பதார்த்தங்கள் நச்சுப்பொருள்கள் என அழைக்கப்படுவதில்லை. லுட்விக் பிரீகர் (Ludwig Brieger) (1849-1919) எனப்படும் வேதியியலாளரே நச்சு (Toxin) என்னும் பதத்தை முதலில் அறிமுகம் செய்தவராவார்.

Thumb
நச்சுப் பதார்த்தங்கள் அல்லது சூழலை குறிப்பிட்டுக் காட்ட உலகளாவிய நிலையில் பயன்படும் எச்சரிக்கை குறியீடு

இவ்வகை நச்சுப்பொருட்கள் புரதங்கள் அல்லது புரதக்கூறுகளாலான சிறிய மூலக்கூறுகளாக இருக்கும். இவை உடல் இழையங்களால் உறிஞ்சப்பட்டு, நொதியங்கள் அல்லது உயிரணு ஏற்பிகள் (cellular receptors) போன்ற பெரிய மூலக்கூறுகளுடன் ஒரு இடைத்தாக்கத்திற்குட்படும்போது, நோய்களை உருவாக்கும் வல்லமையைக் கொண்டிருக்கும். இவற்றின் தீவிரத்தன்மை தனிப்பட்ட நச்சுப்பொருட்களில் வேறுபட்டதாக இருக்கும். தேனீ குத்துவதால் உடலினுள் செலுத்தப்படும் நச்சுப்பொருள் போன்ற சில நச்சுப்பொருட்கள் மிகவும் குறைந்தளவு ஆபத்தையே விளைவிக்கும் அதேவேளை, ஒருவகை பாக்டீரியா வால் உருவாக்கப்படும் பொட்டுலினம் நஞ்சு (botulinum toxin) போன்ற வேறு சில நச்சுப்பொருட்கள் உடனடியாக இறப்பை ஏற்படுத்தக் கூடியளவு ஆபத்து நிறைந்ததாக இருக்கும்.

Remove ads

சொல்லியல்

நஞ்சு (poison) என்று பொதுவில் குறிப்பது, உயிரினங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அனைத்து பதார்த்தங்களையும் குறிப்பதாகும். விடம் (venom) என்பது ஒரு உயிரினம் இன்னொரு உயிரினத்தைக் கடிப்பதனால் அல்லது குத்துவதனால் அடுத்த உயிரினுள் செலுத்தப்படும் நச்சுப்பொருள் ஆகும். சில சமயம் இந்த நஞ்சு ஒரு உயிரினத்திலிருந்து உருவாகின்றது என்பதை வலியுறுத்தும் வண்ணம் உயிரியல் நச்சுப்பொருள் (Biotoxin) என்ற பதமும் பயன்படுத்தப்படுகின்றது.[3][4]

Remove ads

நச்சுப் பொருட்கள்

சில நுண்ணுயிரிகளால் வெளியிடப்படும் நச்சுப்பொருட்கள் கூடிய நச்சுத்தன்மை உடையனவாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கும். இது நுண்ணுயிரிகளின் நோய்த்தொற்றும் தன்மையைச் செயல்படுத்தும் முதன்மை காரணியாக அமையும். நச்சுப் பொருட்களை வெளியிடும் அளவு நஞ்சாக்கும் தன்மை (Toxigenicity) எனப்படும். நச்சுப் பொருட்கள் இரத்தம், நிணநீர் (Lymph) வழியாகப் பயணிக்கும் போது போது காய்ச்சல், இரத்தநாடிகளில் தொந்தரவு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படும். நச்சுப்பொருட்கள் புரத உருவாக்கத்தினைத் தடை செய்யும். இரத்த அணுக்கள் மற்றும் இரத்த குழாய்களையும் சேதப்படுத்தும். நரம்பு மண்டலத்தில் இடையூறு ஏற்படுத்தும்.

Remove ads

வகைகள்

  1. அக நச்சுப் பொருட்கள்
  2. புற நச்சுப் பொருட்கள்

அக நச்சுப் பொருட்கள்

அக நச்சுப் பொருட்கள் பாக்டீரியத்தின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகளின் போது வெளியிடப்படுகின்றன. அக நச்சுப் பொருட்கள் அணுக்களின் உள்ளே தயாரிக்கப்படுகின்றன. எ.கா: விப்ரியோ அக நச்சுப் பொருள் (காலரா நோய்).

வகைகள்

  1. கல நச்சு (Cytotoxin) - இவ்வகை நச்சுப் பொருட்கள் உடற்பகுதிகளின் செயல்பாடுகளை பாதிக்கும்.
  2. நரம்பிய நச்சு (Neurotoxin) - இவ்வகை நச்சுப் பொருட்கள் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை பாதிக்கும்.
  3. குடல் நச்சு (Enterotoxin) - இவ்வகை நச்சுப் பொருட்கள் செல்வரிசை மற்றும் உணவுப் பாதைகளை பாதிக்கும்.

நச்சுப் பொருட்களுக்கு எதிராக மனித உடல் எதிர்ப்புப் பொருளை வெளியிடும். இவ்வெதிர்ப்புப் பொருள் நச்சுப் பொருட்களின் செயல்பாடுகளை நிறுத்தும். இவ்வாறு நிறுத்தப்பட்ட நச்சுப் பொருட்கள் நச்சு எதிர்ப்புப் பொருட்களை (Anti toxin) வெளியிட வல்லது. இதற்கு வீரியமிழந்த நச்சு (Toxoid) என்று பெயர். இந்த வீரியமிழந்த நச்சுதான் தடுப்பு மருந்தாக மனித உடலினுள் செலுத்தப் படுகிறது. இது நச்சு எதிர்ப்புப் பொருட்களை வெளியிட்டு நச்சுப் பொருட்களை அழிக்கிறது; நோய் அழிக்கப்பட்டு உடல்நிலை சீராகிறது.

புற நச்சுப் பொருட்கள்

இது அக நச்சுப் பொருட்களிலிருந்து வேறுபடும். இது நுண்ணுயிரியின் வெளிப்புற சுவரிலிருந்து வெளியிடப் படுகிறது. இது செல்லின் வெளிப்புற சுவரின் (cell wall) ஒரு பகுதி. இதனால் ஏற்படும் நோய்கள்: உடற்குளிர்ச்சி, காய்ச்சல், பலவீனம் மற்றும் சிலசமயங்களில் உயிரிழப்பு ஏற்படும்.

செயல்பாடு

பாக்டீரியாவிலிருந்து வெளிப்படும் அக நச்சுப் பொருள் பெருவிழுங்கியுடன் இணைந்து இண்டர்லூகின்1 (Interleukin 1) என்பதை வெளிப்படுத்தும். அது இரத்த குழாய் வழியே சென்று மூளையில் உள்ள ஐபோதலாமஸ் (Hypothalamus)- உடன் இணைந்து பிரஸ்டாகிளண்டினை (prostaglandin) வெளியிட வைக்கும். இந்த பிரஸ்டாகிளண்டின் உடல் வெப்பநிலையை மாற்றியமைக்கும் (அதாவது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்).

நச்சுமுறிவு

நச்சு முறிவுக்கான மருத்துவ முறைகளாக தற்காலத்தில் நஞ்சு உறிஞ்சுதலை குறைக்க இரைப்பை தூய்மையாக்கல், கிளர்வுற்ற கரி பயன்படுத்துதல், முழு குடல் கழுவல் ஆகியவை பரிந்துரைக்கபடுகிறது. வழக்கமான முறைகளான வாந்தி மூலமோ, மலமிளக்கிகள் மூலமோ அதிகம் செய்யப்படுவதில்லை.

  • கிளர்வுற்ற கரி நஞ்சு உறிஞ்சப்படுவதை தடுக்க சிறந்த சிகிச்சையாகும். எனினும், கரி போன்ற சோடியம், பொட்டாசியம் மற்றும் லித்தியம் போன்ற உலோகங்கள், மதுசாரம், அமிலங்கள் மற்றும் காரங்கள், அரிக்கும் வேதிப்பொருள்கள் போன்ற உலோகங்களுக்கு எதிராக பயனற்றது.
  • முழு குடல் கழுவுதல்: இது நோயாளியை அதிக அளவு பாலியெத்திலின் கிளைக்கால் கொடுத்து இரைப்பை மற்றும் குடல் ஆகியவற்றின் சுவர்களில் உறிஞ்சப்பட்டுவதன் நச்சு உலோகங்களை வெளியேற்ற பயன்படுத்தப்படுகிறது
  • இரைப்பைகழுவல்: உப்புகலந்த திரவத்தை வயிற்றின் உள்ளே செலுத்தி உள்ளார்ந்த பொருட்களை நீக்கும் முறை பல ஆண்டுகளாக வாய் வழியே நச்சுப்பொருட்களை உட்கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • வாந்தி மூலம் நஞ்சை நீக்கும் முறை தற்போது பரிந்துரைக்கபடுவதில்லை ஏனெனில் இதன் மூலம் நச்சு பொருட்கள் முழுமையாக நீக்கப்படுவதில்லை
Remove ads

நச்சுப்பொருட்களும் அதன் முறிவு மருந்துகளும்

மேலதிகத் தகவல்கள் நச்சுப்பொருட்கள், நச்சு முறிவு மருந்துகள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads