நத்தானியேல் வாலிக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நத்தானியேல் வாலிக் (Nathaniel Wallich) (28 சனவரி 1786 - 28 ஏப்ரல் 1854) ஒரு அறுவை மருத்துவரும், தாவரவியலாளரும் ஆவார். கோப்பன்கேகன் நகரில் பிறந்த இவரது இயற்பெயர் நேதன் பென் வுல்ஃப். நேதன் வாலிக் என அழைக்கப்பட்ட இவர் பின்னர் நத்தானியேல் ஆனார். ஒரு வணிகரான இவரது தந்தை வுல்ஃப் பென் வாலிக், 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ஆம்பர்க்குக்கு (Hamburg) அருகில் உள்ள ஓல்சேட்டிய நகரான அல்தோனாவில் இருந்து வந்து கோப்பன்கேகனில் குடியேறியிருந்தார். அறுவை மருத்துவர்களுக்கான றோயல் அக்கடமியில் பட்டம்பெற்ற நத்தானியேல், அவ்வாண்டின் இறுதியில் வங்காளத்தில் இருந்த டானியக் குடியேற்றமாகிய செராம்பூரில் அறுவை மருத்துவராகப் பதவி பெற்றார். ஏப்ரல் 1807 ஆம் ஆண்டில் புறப்பட்டு ஆப்பிரிக்க முனையூடாக அவ்வாண்டு நவம்பர் மாதத்தில் செராம்பூரை அடைந்தார்.
Remove ads
இந்திய வாழ்க்கை
வாலிச்சு ஏப்ரல் 1807 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு கப்பல் பயணத்தைத் தொடங்கினார். ஆப்பிரக்க முனை வழியே, செரம்பூர் என்ற இடத்திற்கு நவம்பர் மாதம் வந்தடைந்தார். பல டேனியக் குடியிருப்புகளை, பிரித்தானியர்கள் கைப்பற்றிய போது, பிரடெரிக்சனகூரில்(Frederiksnagore) இவர் சிறையில் அடைக்கப் பட்டார். ஆனால், 1809 ஆம் ஆண்டு உதவித்தொகையுடன், நன்னடத்தையின் காரணமாகத் தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுதலை செய்யப் பட்டார். அதன் பின்பு, பிரித்தானிய குடியிருப்புகளில் பதவிப் பெற்று பணியாற்றினார். அப்பொழுது, கொல்கத்தாவின் தாவரவியல் பூங்காவின் தொடக்க வளர்ச்சிக்கு இவர் பாடுபட்டார். அப்பொழுது அமைத்த உலர் தாவரகத்தில் , பல புதிய தாவரங்களை, தாவரவியல் முறைப்படி விவரித்தார். பின்பு, அந்த புதிய தாவரங்களின், உலர் தாவரக மாதிரிகளை, ஐரோப்பிய நாடுகளுக்கு பரவலாக வழங்கினார். அதனால் பல தாவரங்களின் பெயர்களுக்குப் பின்னால், தாவரவியல் பெயரீட்டு முறையின் படி, பின்னொட்டாக அவரது பெயர் இடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, Justicia lobelioides Wall. இதில் Wall.[1] என்பது இந்த தாவரவியல் அறிஞரைக் குறிக்கும் சொற்சுருக்கம் ஆகும். இறுதியாக பிரித்தானிய அரசின் உயரிய விருதைப்(Fellowship of the Royal Society (FRS)) பெற்றார்.
Remove ads
தாவரவியலாளர் பெயர்ச்சுருக்கத் தரக்குறியீடு
தாவரவியல் பன்னாட்டு விதிகளின் படி, நத்தானியேல் வாலிக் என்பவரை, Wall. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கத்தால், மேற்கோளாகத் தாவரவியல் பெயருக்குப் பின் குறிப்பிடுவர்.[2]
இப்பெயர் சுருக்கத்தை ஏற்ற தாவரங்கள்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
|
|
|
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads