நத்தை

From Wikipedia, the free encyclopedia

நத்தை
Remove ads

நத்தை மெல்லுடலிகளில் வயிற்றுக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த விலங்கினமாகும். இவற்றின் முதிர்விலங்குகளில் சுருளி வடிவிலமைந்த ஓடு காணப்படும். ஓட்டின் கீழாக தசைப்பாதம் காணப்படும். நத்தை என்பது பொதுவாக கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை என்பவற்றைக் குறிப்பிடப் பொதுவாகப் பயன்படும். ஓடிலாத நத்தை வகைகளும் காணப்படுகின்றன.

விரைவான உண்மைகள் நத்தை, உயிரியல் வகைப்பாடு ...
Thumb
Helix pomatia, ஒருவகை நில நத்தை.
Thumb
மானுசுத் தீவில் காணப்படும் மரகதப் பச்சை நத்தையின் ஓடுI

ஒரு வகை (Pulmonata) நத்தைகள் நுரையீரல்களினால் சுவாசிக்கின்றன. அதேவேளை இன்னொரு வகை (paraphyly) நத்தைகள் பூக்களினால் (செவுள்களினால்) சுவாசிக்கின்றன.

மானுசுத் தீவில் காணப்படும் மரகதப் பச்சை நத்தை என்பது நத்தைகளில் பொதுவாகக் காணப்படாத பச்சை நிறத்தில் உள்ளது.

Remove ads

நத்தைகளினால் பயிர்சேதம்

நேரடி விதைப்பு நெல் வயல்களில் நெல் நாற்று தண்டு பகுதியை நத்தை வெட்டி சேதப்படுத்தும்[1].

உணவு பழக்கம்

நத்தைகளின் உணவுப் பழக்கம் பரவலாக சிற்றினத்திற்கு சிற்றினம் வேறுபடுகிறது. சில சிற்றினங்கள் பொதுவானவையாகும் சில சிற்றினங்கள் குறிப்பிட்ட உணவை உண்பவைகளாகவும் உள்ளன.[2] நத்தைகள் இரவில் உணவு தேடி உண்பவைகளாக உள்ளன.[3] இவை முதன்மையாக அழுகும் கரிமப் பொருட்களை உண்கின்றன.[3] இவற்றின் உணவில் பூஞ்சை, லைகன்கள், பச்சை இலைகள், புழுக்கள், சென்டிபீடு, பூச்சிகள், விலங்கு மலம், கேரியன் மற்றும் பிற ஓடில்லா நத்தைகள் அடங்கும்.[3] சில நத்தைகள் மற்ற நத்தைகளையும் உண்ணும்.[3]

Remove ads

செல்லப்பிராணிகளாக

நத்தைகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. லெப்டி (பார்ன் ஜெர்மி) மற்றும் புனைகதைகளில், கேரி மற்றும் பிரையன் தி நத்தை போன்ற பல பிரபலமான நத்தைகள் உள்ளன.[4]

பாப்பா பாட்டு

நத்தை யம்மா, நத்தை யம்மா, எங்கே போகிறாய்?
அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம் கொண்டு போகிறேன்
எத்தனைநாள் ஆகும் அத்தை வீடு செல்லவே?
பத்தே நாள்தான்; வேணு மானால் பார்த்துக் கொண்டிரு.

மேலும் படிக்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads