நந்தகுமார் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

நந்தகுமார் (திரைப்படம்)
Remove ads

நந்தகுமார் என்பது 1938 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை கேசவ் ராவ் தைபர் இயக்கினார். ஏ. வி. மெய்யப்பன் தயாரித்த இத்திரைப்படத்தில் டி. பி. ராஜலட்சுமி, சி. வி. வி. பந்துலு, டி. எஸ். ராஜலட்சுமி ஆகியோர் நடித்தனர். டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். இராமச்சந்திரன் ஆகியோர் இத்திரைப்படத்தின் வழியாக நடிகர்களாக அறிமுகமாயினர்.[2]

விரைவான உண்மைகள் நந்தகுமார், இயக்கம் ...
Remove ads

கதை

இப்படத்தின் கதையானது கண்ணனின் பிறப்பையும், வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டது.

நடிப்பு

தயாரிப்பு

மராத்தி திரைப்படத் தயாரிப்பாளர் கேசவ் ராவ் தாய்பர், கிருஷ்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மராத்தி திரைப்படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டார். இதன் தமிழ் பதிப்பை ஏ.வி. மெய்யப்பனும், ஜெயந்திலால் தாக்கூரும் தயாரிக்க ஒப்புக்கொண்டனர்.[2][3] டி. பி. ராஜலட்சுமி யசோதையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார், நந்தகோபனாக சி. வி. வி. பந்துலுவும், டி. எஸ். ராஜலட்சுமி இராதையாகவும் நடித்தனர். அப்போது நாடக நடிகராக இருந்த டி. ஆர். மகாலிங்கம், 14 வயதில் கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் நடித்து இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.[3] பிரபல நகைச்சுவை நடிகராக ஆன டி. ஆர். ராமச்சந்திரனும், பிரபல இசையமைப்பாளராக மாறய எஸ். வி. வெங்கட்ராமனும் இந்தப் படத்தின் மூலம் தனங்களது வாழ்க்கையைத் தொடங்கினர்.[2]

தேவகியின் தாயாக நடித்த நடிகை பாடிய பாடலைக் கேட்டு தாய்பரும், மெய்யப்பனும் ஏமாற்றமடைந்தனர். எனவே அவர்கள் பின்னணியில் வேறொருவர் குரல் கொடுத்து பாடல் பாடும் முறையை புதுமையான முறையை அறிமுகப்படுத்தினர்.[2] தீன தயாபரனே என்ற பாடலை படத்தில் கிருஷ்ணரின் தாயாக நடித்த நடிகைக்காக அப்போது பம்பாயில் பிரபலமாக இருந்த கருநாடக இசைப் பாடகி லலிதா வெங்கடராமன் பாடினார். நடிகை பாடலுக்கேற்ப வாயசைத்தார். இதன் மூலம் லலிதா வெங்கடராமன் தமிழ் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகி என்ற பெருமையைப் பெற்றார், மேலும் பின்னணிப் பாடலை அறிமுகப்படுத்திய முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது.[3] மெய்யப்பன் மவுண்ட் ரோட்டில் இருந்த கிளப் அவுசை குத்தகைக்கு எடுத்து, அங்கு வேண்டிய அமைப்புகளை ஏற்படுத்தி காட்சிகளை படமாக்கினார்.[3]

இப்படத்தின் மராத்தி பதிப்பில் யசோதையாக நடித்த துர்கா கோட் என்னும் நடிகை மார்புக் கச்சை அணிந்து நடித்தார். அதே போல டி. பி. ராஜலட்சுமியும் மார்புக் கச்சை அணிந்து நடிக்குமாறு வற்புறுத்தப்பட்டார். ஆனால் தமிழ்நாட்டுக் கோயில் ஓவியங்களில் தான் பார்த்த வகையில் யசோதை புடவை அணிந்து இருப்பதாகதான் சித்தரிக்கப்பட்டுள்ளார். எனவே நான் மார்புக் கச்சை அணியமாட்டேன் அணிந்துதான் நடிப்பேன். அதுதான் தமிழ்ப் பண்பாடு என்றார்.[4]


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads