நந்தமூரி பாலகிருஷ்ணா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நந்தமூரி பாலகிருஷ்ணா அல்லது பாலையா ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், இந்தியத் திரைப்பட நடிகருமாவார். இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாவார். குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[1][2]
Remove ads
தொடக்கால வாழ்க்கை மற்றும் குடும்பம்
பாலகிருஷ்ணா நடிகரும் ஆந்திர முதல்வருமான என். டி. ராமராவ் - பசவ தரகம் தம்பதியினருக்கு மகனாக சென்னை(அப்போது மதராஸ்) பிறந்தார்.[3][4] அப்போது தெலுங்கு திரையுலகமும் சென்னையிலேயே இயங்கிவந்தது. அதனால் பாலகிருஷ்ணாவின் குழந்தைப்பருவம் சென்னையிலேயே கழிந்தது. அதன் பின் ஆந்திரா,தமிழ்நாடு,கேரளா பிரிவினையின் போது பாலகிருஷ்ணாவின் குடும்பம் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தது. இளங்கலை வணிகவியல் படிப்பை ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் பாலகிருஷ்ணா முடித்தார்.[5]
1982ல் வசுந்திரா தேவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர் .
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads