நபி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நபி என்பது அரபிச் சொல்லாகும். இஸ்லாமிய நம்பிக்கையின்படி முதல் மனிதராக ஆதம் நபி (அலை) அவர்களை இறைவன் படைத்தான். பின் அவர்களின் விலா எலும்பில் இருந்து ஹவ்வா என்பவரை படைத்தான். பின் இவர்களின் சந்ததிகள் இந்த உலகை நிரப்பினர். அந்த மக்கள் இறைவனை மறந்து அநீதியின் பக்கம் சாயும் பொழுது, அவர்களை நல்வழிப்படுத்த இறைவன் தனது தூதர்களை அனுப்பினான். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களையே நபி என்று முஸ்லிம்கள் அழைகின்றனர். இப்ராஃகிம்(அலை) (ஆபிரகாம்). மூஸா(அலை) (மோசே), ஈஸா(அலை)(இயேசு) ஆகியோர் நபிகளில் சிலர். முஸ்லிம்களின் நபியாக போற்றப்படும் ஈஸா(அலை) நபியையே கிறித்தவ சமயத்தோர் இறைவனாக வணங்குகின்றனர். இதன் பிறகே முஹம்மது நபி(ஸல்) இறைவனால் அனுப்பப்பட்டார். அதில் முதல் நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் கடைசி நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் இடையில் பல நபிமார்கள் தோன்றியதாக இஸ்லாம் கூறுகிறது. அவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் இறைச்செய்தியை மனிதர்களுக்கு அறிவிக்கும் தூதர்கள் என்பதைத்தவிர சாதாரண மனிதர்களேயாகும் ஆவார்கள் என்பது முன் நம்பிக்கை ஆகும்.

Remove ads

திருக்குர் ஆனில் நபிமார்கள்

முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

  1. ஆதம் (அலை)
  2. இத்ரீஸ் (அலை)
  3. நூஹ் (அலை)
  4. ஹுது (அலை)
  5. ஸாலிஹ் (அலை)
  6. இப்ராஹிம் (அலை)
  7. இஸ்மாயீல் (அலை)
  8. இஸ்ஹாக் (அலை)
  9. லூத் (அலை)
  10. யாகூப் (அலை)
  11. யூசுப் (அலை)
  12. ஸுஹைப் (அலை)
  13. அய்யூப் (அலை)
  14. மூஸா (அலை)
  15. ஹாரூன் (அலை)
  16. துல்கிப்ல் (அலை)
  17. தாவூத் நபி (அலை)
  18. ஸுலைமான் நபி (அலை)
  19. இல்யாஸ் (அலை)
  20. யஹ்யா (அலை)
  21. யூனுஸ் (அலை)
  22. ஸக்கரியா (அலை)
  23. அல் யசஉ (அலை)
  24. ஈஸா (அலை)
  25. முஹம்மத் (ஸல்)
    இருபத்தைந்து நபிமார்களைத் தவிர்த்து இன்னும் நான்கு பெயர்களையும்  திருக்குர்ஆன்  குறிப்பிடுகிறது. இவர்கள் இறைத்துத்தூதர்களா அல்லது அவ்வாறில்லையா என்பது குறித்து அறிஞர்களிடையே பல கருத்துக்கள் நிலவுகின்றது. அது குறித்து இறைவனே மிக நன்கறிந்தவன்.
1. துல்கர்னைன் - ( ذو القرنين ) 18:83  
2. லுக்மான் - ( لقمان الحكيم ) 31:12 
3. உஜைர் - ( عزیر ) 9:30                       
4. துப்பஃஉ- ( تُبَّعٍ ) 44:37, 50:14
மேலதிகத் தகவல்கள் எண்., பெயர் ...
Remove ads

ஸல்/அலை

நபிமார்களின் பெயர்களை செவியுறும்பொழுது "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்று கூறுவார்கள். அதற்கு பொருள், இறைவன் அவருக்கு அருளைப்பொழிவானாக.

முஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள்.

முகம்மது நபி அல்லாத ஏனைய பிற எல்லா நபிமார்களின் பெயர்களை எழுதும் போது அலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அலை என்பது அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்பதன் சுருக்கம் இவருக்கு அருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads