நம்மவர்

கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நம்மவர்
Remove ads

நம்மவர், (Nammavar) என்பது 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படத்தை கே. எஸ். சேதுமாதவன் இயக்க கமலஹாசனும் கௌதமியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் மகேஷ் மகாதேவன். இப்படம் வசூலில் வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் நல்லதொரு படமென பலராலும் பாராட்டப்பட்டது.

விரைவான உண்மைகள் நம்மவர், இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

செல்வம் (கமலஹாசன்) கல்லூரியின் புதிய வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் துணை முதல்வர். அக்கல்லூரியின் செல்வாக்கு படைத்த ஒரு பெரிய மனிதனின் மகன் ரமேஷ் (கரண்). பெற்றோரின் அன்பும் வழிகாட்டலும் சரியான முறையில் கிடைக்காத ரமேஷ் கல்லூரியில் பாதை மாறிச் செல்லும் ஒரு முரட்டு மாணவன். தன்னோடு போகாமல் தனது பணத்தாலும் செல்வாக்காலும் பிற மாணவர்களையும் கெடுக்கிறான், தனக்குப் படியாதவர்களைப் பாடாய்படுத்துகிறான். செல்வத்திற்கும் ரமேஷுக்கும் நடக்கும் மோதல்களும் இறுதியாக செல்வம் அவனை வழிப்படுத்தி, கல்லூரியை எப்படி சரிப்படுத்துகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

Remove ads

நடித்தவர்கள்

  • கமலஹாசன் செல்வமாக
  • கௌதமி வசந்தியாக
  • நாகேஷ் திரு. ராவ் ஆக
  • ஸ்ரீவித்யா
  • கரண் ரமேஷாக
  • செந்தில்
  • கோவை சரளா
  • சந்தான பாரதி
  • டெல்லி கணேஷ்
  • பிருந்தா நிர்மலாவாக

படப்பிடிப்பின் முதற்காட்சி

இப்படத்தின் முதல் காட்சியாக, கரண் கல்லூரி மாணவனாகவும் கமலகாசன் ஆசிரியராகவும் வரும் வகுப்பறைக் காட்சி விஜயவாகினி ஸ்டியோவில் படமாக்கப்பட்டது.[1]

விருதுகள்

ஒலிப்பதிவு

இப்படத்தின் 6 பாடல்களும் இசையமைப்பாளர் மகேஷ் மகாதேவனால் இசையமைக்கப்பட்டது. இப்படத்திற்கு இசையமைக்கும் பணியை ஏற்றுக் கொள்வதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் மகேஷுக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகத்தான் புற்றுநோய் உள்ளவராக கமலஹாசனின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்ற கருத்து நிலவியது.[3] மகேஷ் தான் இறந்து போவதற்கு முன் (2002), கமலஹாசனின் குருதிப்புனல், ஆளவந்தான் படங்களிக்காக இசையமைத்தார். பின்னணிப் பாடகர் சீனிவாஸ் இவரது இசையில்தான் அறிமுகமானார்.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads