நலத்தேவைகளின் சமபாவனை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நலத்தேவைகளின் சமபாவனைச் சிந்தனை (Principle of equal consideration of interests) என்பது ஒரு செயல் சரியானதா என்று தீர்மானிக்கும் போது அச்செயலால் பாதிக்கப்படும் அனைத்து நலத்தேவைகளையும் கணக்கில் கொண்டு அந்த நலத்தேவைகளை சமமாக எடைபோட வேண்டும் என்று கூறும் ஒரு தார்மீகக் கோட்பாடாகும்.[1] இச்சொல்லாடலானது ஆஸ்திரேலிய தார்மீக மெய்யியல் அறிஞரான பீட்டர் சிங்கரின் 1975-ம் ஆண்டைய புத்தகமான அனிமல் லிபரேஷன் ("விலங்கின விடுதலை") என்ற நூலில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.[2] மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து விலங்கினங்களும் கருத்தில் கொள்ள வேண்டிய நலத்தேவைகளைக் கொண்ட உயிர்கள் தான் என்று தெளிந்த பின்னர், நலத்தேவைகளின் சமபாவனைச் சிந்தனைக் கொள்கையானது நிறவெறி, பாலினவெறி ஆகியவற்றை மட்டுமல்லாது விலங்கினவாதத்தையும் எதிர்க்கிறது என்று சிங்கர் வலியுறுத்துகிறார்.[3] ஒரு விலங்கின் நலத்தேவைகளைக் கருத்தில் கொள்ளும்போதெல்லாம் அங்கு தார்மீக ரீதியில் பொருத்தமாக அமைவது அவ்விலங்கின் பகுத்தறியும் திறன் அல்ல எனறும் மாறாக அது அவ்விலங்கின் துன்பத்தை அனுபவிக்கும் திறனேயாகும் என்று ஜெரமி பெந்தாம் வலியுறுத்துகிறார்.[4]
நலத்தேவைகளின் சமபாவனைச் சிந்தனையானது நடுநிலைமை என்னும் பரந்த தத்துவக் கருத்துகளுடன் தொடர்புடையது ஆகும். நடுநிலைமை எனப்படும் பாரபட்சமற்ற தன்மை என்பது, குறிப்பாக நீதிக் கொள்கையில், சமத்துவத்தின் பல பொருட்களைக் குறிக்க வல்லது என்பதும் இங்கு நோக்கத்தக்கது.[5]
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள் தரவுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads