நங்காஞ்சி ஆறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நல்காசி ஆறு அல்லது நங்காஞ்சி ஆறு, அமராவதி ஆற்றின் துணையாறு ஆகும். தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராம மலைப்பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் பரப்பலாறு அணையில் தேங்கி, தேங்கும் நீர் மற்றும் உபரி நீர் சிறு ஆறாக நங்காஞ்சி ஆறு எனும் பெயரில் விருப்பாட்சி கிராமத்திற்கு அருகில் தலையூத்து என்ற இடத்தில் சிற்றருவியாக விழுந்து வடகிழக்காக விருப்பாச்சி, அரசப்பபிள்ளைபட்டி, தங்கச்சியம்மாபட்டி, சவ்வாதுபட்டி, இடையகோட்டை, கோவிந்தாபுரம் ஆகிய ஊர்களின் வழியாக ஓடி குடகனாற்றில் கலந்து, பின் அமராவதி ஆற்றோடு கலக்கிறது.
Remove ads
சங்க கால பெயர்
இந்த ஆறுக்கு சங்க காலத்தில் ”நல்காசி” என்ற பெயர் வழங்கி வந்துள்ளது[1]. விருப்பாச்சி பாளையம் இந்த ஆற்றின் கரையில் அமைந்து இருந்தது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads