ஒட்டன்சத்திரம்

இது தமிழகத்தில் கொங்கு நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia

ஒட்டன்சத்திரம்map
Remove ads

ஒட்டன்சத்திரம் (ஆங்கிலம்: Oddanchatram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில், ஒட்டன்சத்திரம் வட்டம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது திண்டுக்கல் - பழநி, திண்டுக்கல் - தாராபுரம் இடையே உள்ளது.

விரைவான உண்மைகள்

இங்கு தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப் படுகின்றன. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர், வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய், இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர், வெண்ணெய் அனுப்பப்படுகின்றன.

Remove ads

பழம்பெயர்

ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் உப்பிலியபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. முந்தைய வருவாய் ஆவணங்கள், நிலம், வர்த்தக ஆவணங்கள் (கிரையப் பத்திரம்) போன்றவற்றில் உப்பிலியபுரம் என்ற பெயரைக் காணமுடிகிறது.

புதுப்பெயர்

கோயில் தலங்கள் அதிகமாக உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கல் ஒட்டர்கள் (போயர்) மிகவும் செழிப்போடு இருந்தார்கள்.... கோவில் செய்யப்படும் கல் வேலைகள் எல்லாம் இந்த சமூகத்தினரை  செய்து.. வந்தனர். இதனால் மன்னர்கள் அதிக கொடை கொடுத்து வந்தனர்... பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு சத்திரம் அமைத்து உணவளித்தனர்... இதுதான் உண்மையான வரலாறு.... கல் ஒட்டர்கள் ஒட்டன்சத்திரத்தின் சுற்று பகுதிகளில் இன்றும் வசித்து வருகிறார்கள்... நாய்க்கர் ஆட்சியில் படைத்தளபதிகளாக பணிபுரிந்தனர்...[3]

Remove ads

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒட்டன்சத்திரம் நகராட்சி 8046 குடும்பங்களையும், 55,064 மக்கள்தொகையும் கொண்டது.[4] பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 20.3% மற்றும் 0.06% ஆகவுள்ளனர்.

விவசாயம்

இங்கு முக்கியத் தொழில் விவசாயம் ஆகும். மக்காச்சோளம், புகையிலை,காய்கறிகள் மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, முருங்கை, பருத்தி, சூர்யகாந்தி, கரும்பு, உள்ளிட்டவை பயிர் செய்யப் படுகின்றன.

நல்காசி (நங்காஞ்சி) ஆறு அணை

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானலுக்கு, இங்கிருந்து வடகாடு, பாச்சலூர் ,தாண்டிக்குடி ,பண்ணைக்காடு வழியாக மலைப் பாதையில் பேருந்து வசதி உள்ளது. இம்மலையில் 15 கி.மீ. தொலைவில் வடகாடு (ஒட்டன்சத்திரம் வட்டம்) ஊரின் அடர்ந்த வனப் பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் பரப்பலாறு அணையில் தேங்கி, உபரி நீர் சிறு ஆறாக நல்காசி (நங்காஞ்சி ஆறு) பெயரில் விருப்பாட்சி என்ற கிராமத்திற்கு அருகில் தலையூத்து என்ற இடத்தில் 60 அடி உயரத்திலிருந்து [[|அருவி|அருவியாக]] விழுந்து, வடகிழக்காக ஓடி இடையகோட்டை என்ற ஊருக்கு அருகில் நல்காசி (நங்காஞ்சி) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நங்காஞ்சி ஆறு நல்காசி ஆறு அணையில் தேக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன் படுத்தப்படுகிறது.

Remove ads

விருப்பாச்சி (விருப்பாட்சி)

விருப்பாட்சி ஒட்டன்சத்திரத்திற்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைகள் சூழ்ந்த நல்காசி (நங்காஞ்சி) ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகான சிற்றூராகும். தமிழக அரசால் மணிமண்டபம் எழுப்பியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் பிறந்த ஊராகும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பு இந்த ஊரில் ஜமீன்தார் ஆட்சி இருந்தது. ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட விருப்பாச்சி ஜமீனுடன் வேலூர் ,இடையகோட்டை, சத்திரப்பட்டி போன்ற ஜமீன்கள் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன. வடகாடு, பாச்சலூர், தாண்டிக்குடி, பண்ணைக்காடு ஆகிய மலைப்பகுதியில் விளையும் மலை வாழைக்கு பெரிய சந்தை இங்கு இருந்துள்ளது. இன்றைய வாகனப் போக்குவரத்தால், தற்போது சந்தைக் கட்டிடங்கள் இடிந்து சிதைந்துள்ளன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads