நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (United National Front for Good Governance, UNFGG சிங்களம்: යහපාලනය සඳහා වූ එක්සත් ජාතික පෙරමුණ) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணியாகும். இக்கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு 2015 சூலை 12 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி United National Front for Good Governance, தலைவர் ...
Remove ads

2015 நாடாளுமன்றத் தேர்தல்

2015 ஆகத்து 17 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவராக முன்னாள் அரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிருப்தி அடைந்த சிங்கள தேசியவாதக் கட்சியான ஜாதிக எல உறுமய அக்கூட்டணியில் இருந்து 2015 சூலை 5 இல் விலகி, கூட்டணியில் இருந்து விலகிய மேலும் சிலருடன் இணைந்து தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.[2][3]

இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற குழுவின் சார்பில் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, எம். கே. டி. எஸ். குணவர்தன மற்றும் ஜாதிக எல உறுமய கட்சியின் தலைவர்கள் சம்பிக்க ரணவக்க, அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோருக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் 2015 சூலை 12 இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இக்கூட்டணி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாததால் 2015 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டது.[1]

Remove ads

கூட்டுக் கட்சிகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads