நல்லூர்வயல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நல்லூர்வயல் என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த மத்துவராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

சிறுவாணி அணை அமைந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த இக்கிராமத்தின் பெயர், ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி பதிவேடுகளில் நல்லூர்வயல் என உள்ளது. ஆனால் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் அஞ்சல் துறை பதிவேடுகளில் இக்கிராமத்தின் பெயர் காருண்யா நகர் எனப்பெயர் உள்ளதை எதிர்த்து மத்துவராயபுரம் ஊராட்சி பொதுமக்கள் பிப்ரவரி, 2021-இல் போராட்டம் நடத்தினர். [1][2]

இவ்வூரில் டிஜிஎஸ் தினகரன் மகன் பால் தினகரன்[3] குடும்பத்தினரின் அறக்கட்டளை நடத்தும் காருண்யா பல்கலைக்கழகம் உள்ளது என்பதால், நல்லூர்வயல் என்ற இக்கிராமத்தின் பெயரை விடுத்து காருண்யா நகர் என வருவாய்த் துறை பதிவேடுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads