காருண்யா பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

காருண்யா பல்கலைக்கழகம்
Remove ads

காருண்யா பல்கலைக்கழகம் (முன்னர் காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கழகம்) கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஓர் முழுமையும் தங்கிப் படிக்கும் கிறித்தவ தனியார்த்துறை பல்கலைக்கழகம். இதனை கிறித்தவ சிறுபான்மை அமைப்பாக கிறித்தவ பிரசாரகர்களும் இந்தியாவில் யேசு அழைக்கிறார் அமைப்புகளை நிறுவியர்களுமான மறைந்த முனைவர் டி. ஜி. எஸ். தினகரன் மற்றும் அவரது மகன் பால் தினகரன் நிறுவினர்.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Remove ads

வரலாறு

1981ஆம் ஆண்டு முனைவர். டி. ஜி. எஸ். தினகரன், தமக்கு இறைவன் இட்ட கட்டளை நிறைவேற்றும் வகையில், தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க முயன்றார். அதன்படியே 4 அக்டோபர் 1986 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜூன் சிங் தலைமையில் காருண்யா தொழில்நுட்பக்கழகமாக மலர்ந்தது.கோயம்புத்தூரிலிருந்த பாரதியார் பல்கலைக்கழக்கதின் கீழ் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரியாக விளங்கியது. காருண்யா கல்வி அறக்கட்டளை இதனை நடத்தி வந்தது. 2004ஆம் ஆண்டு கல்லூரியின் கல்விச் சிறப்பினை யொட்டி மனிதவளத்துறை அமைச்சகம் இதன் நிலையை காருண்யா பல்கலைக்கழகமாக உயர்த்தியது. [1]


Remove ads

தரவரிசை

இந்தியாவின் முதற் பதினைந்து தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகவும்[2] பொறியியல் கட்டமைப்புகளில் முதற் பத்து கல்லூரிகளில் ஒன்றாகவும் ஆங்கில இதழ் அவுட்லுக் மதிப்பிட்டுள்ளது.[3]

நிர்வாகம்

காருண்யா பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராக மறைந்த முனைவர்.டி. ஜி. எஸ். தினகரனும்,வேந்தராக முனைவர். பால் தினகரனும் உள்ளனர். முனைவர். பால் பி அப்பாசாமி துணைவேந்தராக உள்ளார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads