நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல்

பிரான்சின் பாரிசில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல் 2015 நவம்பர் 13 அன்று பிரான்சின் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் ஆகும். நவம்பர் 13 இரவு பாரிசின் பல இடங்களில் துப்பாக்கி, குண்டு, தற்கொலைத் தாக்குதல்கள், மற்றும் பணயக்கைதிகளைப் பிடித்தல் போன்றவை இடம்பெற்றன. தாக்குதல்கள் மஐநே இரவு 09:16 மணிக்கு,[4] பிரான்சு விளையாட்டரங்கம், மற்றும் செயின்ட் டெனிசு என்ற வடக்குப் புறநகர்ப் பகுதியிலும், 1வது, 10வது, 11வது மாவட்டங்களிலும் ஆரம்பமாயின.[4][5] மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளும், ஆறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு நிகவுகளும் இடம்பெற்றன.[5]

விரைவான உண்மைகள் நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல் November 2015 Paris attacks, இடம் ...

குறைந்தது 127 பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது,[2] இவர்களில் 89 பேர் பட்டக்கிளான் நாடக அரங்கில் கொல்லப்பட்டனர்.[6][2][7][8] 342 பேர் காயமடைந்தனர்.[2] இவர்களில் 99 பேர் படுகாயமடைந்தனர்.[3] தாக்குதல் நடத்தியவர்கள் அனைத்து எட்டு பேரும் கொல்லப்பட்டார்கள்.[2][3] இத்தாக்குதல்களை அடுத்து, பிரெஞ்சு அரசுத்தலைவர் பிரான்சுவா ஆலந்து நாடு முழுவதும் அவசரகால நிலையைப் பிறப்பித்தார். பிரான்சுடனான எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டது.[6] 1944 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக பாரிசு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.[9]

நவம்பர் 14 அன்று இசுலாமிய அரசு இத்தாக்குதல்களுக்கு உரிமை கோரியது.[10][11] சிரிய உள்நாட்டுப் போர் மற்றும் ஈராக்கிய உள்நாடுப் போர்களில் பிரான்சின் பங்களிப்பே இத்தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.[12] இத்தாக்குதல்கள் "உள்நாட்டு உதவியுடன்" வெளிநாடு ஒன்றிலேயே திட்டமிடப்பட்டதாக பிரான்சுவா ஆலந்து தெரிவித்தார்.[13][14] இத்தாக்குதல்கள் "போர்த் தன்மையானது" என அவர் கூறினார்.[15]

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பாரிசில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலாகவும்,[16][17] 2004 மாட்ரிட் தாக்குதலுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதலாகவும் இது பார்க்கப்படுகிறது.[18]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads