சிரிய உள்நாட்டுப் போர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிரிய உள்நாட்டுப் போர் என்பது சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினைக் குறிக்கும்[64]. துனீசியப் புரட்சியின் தாக்கத்தால் அராபிய நாடுகளில் எழுந்த தொடர் போராட்டங்களின் அங்கமாக சிரியாவில் 26 சனவரி 2011 முதல் நடைபெற்றுவரும் போராகும். இந்தப் போர் முன்பு எப்போதும் நடந்திராத ஒன்றாக விவரிக்கப்படுகிறது.[65][66]
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |

சிரியாவில் 1962ஆம் ஆண்டு முதல் நெருக்கடி நிலை ஆட்சி நடைபெற்று வருகிறது. இது குடிமக்களுக்கான அரசியலமைப்பு பாதுகாவல்களை இடைநீக்கம் செய்துள்ளது. அஃபேஸ் அல்-அஸாத்தின் முப்பதாண்டுகள் ஆட்சிக்குப் பிறகு அவரது மகன் பஷர் அல்-அஸாத் கடந்த பத்தாண்டுகளாக ஆண்டு வருகிறார்.
மார்ச் 18, 19 நாட்களில் நிகழ்ந்த போராட்டங்கள் பல பத்தாண்டுகளில் நடந்தேறியதில்லை எனவும் சிரியாவின் அரசு போராடும் மக்களுக்கு எதிராக வன்முறையால் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்றும் ஊடகச் செய்திகள் கூறின. இந்த வன்முறையை ஐக்கிய நாடுகள் செயலாளர்-நாயகம் பான் கி மூன் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார்.[67]
Remove ads
உலக நாடுகளின் இராணுவப் பங்களிப்பு

சிரியா
சிரிய அரசை ஆதரிக்கும் நாடுகள்
சிரியப் போராளிகளை ஆதரிக்கும் நாடுகள்
சிரிய அரசு, சிரியப் போராளிகள் என இருதரப்பிற்கும் பிளவுபட்ட ஆதரவு
போரின் பாதிப்புகள்
உயிரிழப்புகள்
20 ஆகஸ்ட் 2014 அன்றைய ஐக்கிய நாடுகள் அவையின் ஆய்வின்படி, 1,91,369 பேர் உயிரிழந்துள்ளனர்.[68]
சிரியா அகதிகள்
சிரியா உள்நாட்டுப் போரில், 2012 முதல் 2017 முடிய சிரிய மக்களை இசுலாமிய அரசு பயங்கரவாதிகள் மற்றும் பிற இசுலாமிய பயங்கரவாத அமைப்புகள் தாக்கிக் கொன்றதாலும், சிரியர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டதாலும், சிரிய மக்கள் சிரியாவை விட்டு அகதிகளாக வெளியேறினர்.[69]
2018 ஆம் ஆண்டு போர்
இந்த உள்நாட்டுப் போரானது மீண்டும் 2018 ஆம் ஆண்டு ஆரம்பம் ஆனது. சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது ரஷியாவால் ஆதரிக்கப்படும் சிரியா அரசுப் படைகள் பெப்ரவரி 18, 2018 ஆம் நாள் முதல் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 121 பேர் குழந்தைகள் என பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான "சிரியன் அப்சர்வேட்டிரி ஃபார் ஹூமன் ரைட்ஸ்" அமைப்பு கூறியுள்ளது.[70]
Remove ads
இதையும் காண்க
மேலும் படிக்க
- Lawson, Fred, ed. (2009). Demystifying Syria.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads