நாகாராதனை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகாராதனை (நாக ஆராதனை, Nagaradhane) என்பது பாம்பு வழிபாட்டின் ஒரு வடிவமாகும். இதுவும் பூத கோலம் என்ற நடன வடிவமும் தட்சிண கன்னடா, உடுப்பி, காசர்கோடு ஆகிய இடங்களை உள்ளடக்கிய துளு நாடு என்ற பகுதியில் நிலவும் தனித்துவமான பாரம்பரியங்கள் ஆகும். இது துளு மக்களால் பின்பற்றப்படுகிறது. பாம்புகள் தெய்வங்களாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. பல சமூக, மத மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக மதிக்கப்படுகின்றன, திருப்திப்படுத்தப்படுகின்றன, மேலும் பாதுகாக்கப்படுகின்றன.


Remove ads
தோற்றம்
பாம்புகள் இந்தியாவில் சக்தி, பிரமிப்பு மற்றும் மரியாதையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இந்து புராணங்களின்படி, விஷ்ணு, ஆதிசேசன் என்ற மாபெரும் பாம்பின் நிழலில் ஓய்வெடுக்கிறார். சிவபெருமான் கழுத்தில் வாசுகி என்ற பாம்பை அணிந்துள்ளார்.
இதன் தோற்றத்தை கண்டுபிடிப்பது கடினம். துளு மக்களிடையே சில குலங்கள் நாகவம்சி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், பாம்பு வழிபாடு அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டிருக்கலாம். பாம்பு வழிபாட்டின் பெரும்பாலான சடங்குகள் பிராமணர்களால் செய்யப்படுகின்றன என்றாலும், நாக வழிபாடு இல்லாத ஒரு துளுவ குடும்பம் கூட இல்லை. அங்கு இவர்களின் மத்தியில் அளியா சந்தான பரம்பரையின் படி நாக தேவதையை வணங்குகிறார்கள்.
துளு நாடு அல்லது தெற்கு கர்நாடகாவின் சில பகுதியில் விவசாயமும் பிரதானமாக உள்ளது . இந்த வயல்களில் பாம்புகள் கொறித்துண்ணிகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற உதவுகின்றன. பாம்புகளை வணங்குவதற்கு இது ஒரு நம்பத்தகுந்த காரணமாக இருக்கலாம்.

Remove ads
மேலும் காண்க
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads