நாகூர் சலீம்

இந்திய முஸ்லிம் கவிஞர், பாடலாசிரியர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாகூர் சலீம் (பிறப்பு: பெப்ரவரி 21 1936—ஜூன் 06 2013) இந்திய முஸ்லிம் கவிஞர், பாடலாசிரியர், நாகூரில் ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவி அவர்களின் வழித்தோன்றலான ஷரீஃப் பெய்க் அவர்களின் மகனாகப் பிறந்த இவர் நாகூரில் தலைமாட்டுத்தெருவில் வாழ்ந்து வந்தார். 7000இற்கும் மேற்பட்ட இசைப்பாடல்களையும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்திய இவர் பல தொலைக்காட்சிகளிலும் பங்களிப்புச் செய்துவருமாவார். அத்துடன், முன்னணி இதழ்களில் பல கவிதைகளை எழுதியுள்ளார். இவர் ஒளி மாத இதழின் இணைப்பாசிரியராக இருந்துள்ளார். நாகூர் ஹனிபா, காயல் ஷேக் முஹம்மது, சிங்கை ஜெய்னுல் ஆபிதீன், அதா அலி ஆஸாத் போன்ற பல பாடகர்களுக்கான பிரபலமான பாடல்களை எழுதியவர். “பாலை வனம் தாண்டிப் போகலாமே நாம்”, “தீனோரே நியாயமா”, “அருள் மணக்குது” போன்ற பாடல்கள் நாகூர் இசைமுரசு ஈ.எம்.ஹனிபாவுக்காக இவர் எழுதியவை. பேரறிஞர் அண்ணா இறந்த பிறகு, அவருக்காக, இசைமுரசு பாடிய, “சிரித்துச் செழித்த உன் முகமெங்கே”, “பட்டு மணல் தொட்டிலிலே” ஆகிய பாடல்களை இவரே எழுதினார். வெளிவர இருந்த “நாகூரார் மகிமை” என்ற திரைப்படத்துக்கான எல்லாப் பாடல்களையும் இவரே எழுதினார். எம்.எஸ் விஸ்வநாதன் அதற்கு இசையமைத்துள்ளார். மொகலே ஆஸம் திரைப்படத்தின் தமிழ் தழுவலுக்கான எல்லாப் பாடல்களையும் சலீம் எழுதினார். காயல் ஏ.ஆர். ஷேக் முஹம்மது பாடி மிகவும் பிரபலமான “தமிழகத்து தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்” என்ற பாடலை எழுதியவரும் சலீமே. இவருக்கு இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உண்டு. 2013ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி இவர் மறைந்தார். இவர் மறைந்தபோது அவருக்கு 77 வயது. தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றவர்.[சான்று தேவை] இவருடைய மூத்த சகோதரி சித்தி ஜுனைதா பேகம் தான் தமிழில் முதன் முதலாக நாவல் எழுதிய இஸ்லாமியப் பெண்மணியாவார்.

  • பிரார்த்தனைப் பூக்கள்
  • காதில் விழுந்த கானங்கள்


ஆகியவை இவர் எழுதிய சில பாடல்களின் தொகுப்பு நூல்களாகும்

Remove ads

பட்டங்கள்

  • கலைமாமணி
  • கவிச்சக்கரவர்த்தி
  • அருட்கவி அரசு
  • மக்கள் கவிஞர்
  • சுதந்திரக் கதிர்

பாடல்கள்

500 இசைத்தட்டுகளையும், 100இற்கும் மேற்பட்ட ஒலிநாடாக்களையும், ஏறத்தாழ 6000 மேற்பட்ட இசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads