நாகூர் நாகநாதசுவாமி கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகூர் நாகநாதசுவாமி கோயில், தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூரில் உள்ள சிவன் கோயில் ஆகும்.

இறைவன், இறைவி
இத்தலத்தில் மூலவர் நாகநாதர் என அழைக்கப்படுகின்றார். ஆதிசேசனான நாகராஜன், சிவபெருமானைப் பூசித்து வழிபட்டதால் மூலவர் நாகநாதர் எனப்படுகிறார். இறைவி நாகவல்லி ஆவார். உள் திருச்சுற்றில் ராகு, நாகவல்லி, நாககன்னியருடன் தனி சன்னதியில் உள்ளார்.[1] இத்திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, நாகர்கள், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், அண்ணாமலையார், சண்டிகேசுவரர், காசி விசுவநாதர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.[2]
விழாக்கள்
இக்கோயிலில் மகா சிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.[1]
சிறப்பு
வைகாசி பௌர்ணமியில் புன்னை மரத்தடியில் சுயம்பு லிங்கமாகத் தோன்றி காட்சியளித்த பெருமையுடைய தலமாகும்.இத்தலத்தில் பாம்பு யாரையும் தீண்டாது என்று கூறுவர். [1] நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.[3]
மேற்கோள்கள்
படத்தொகுப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads