நாசக் வைரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாசக் வைரம் [2] மற்றும் திருமேனிக் கண் [3] ) என்பது ஒரு பெரிய, 43.38 காரட்டுகள் (8.676 g) கொண்ட வைரமாகும். இது 15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்நபோது இன்னும் பெரியதாக 89 காரட் வைரமாக இருந்தது.[4] இந்த வைரமானது கோல்கொண்டா வைரச் சரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டு இந்தியாவிலேயே வெட்டி பட்டைத் தீட்டப்பட்டது. இந்த வைரமானது குறைந்தது கி.பி. 1500 முதல் 1817 வரை இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில், நாசிக் அருகே உள்ள திரிம்பகேஸ்ரர் சிவன் கோவில் இருந்தது.[4] அங்கிருந்த இந்த வைரத்தை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தினரால் மூன்றாம் ஆங்கிலேய-மராத்தித போரின் முடிவில் கைப்பற்றப்பட்டது. பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் 1818 இல் பிரித்தானிய நகைக் கடைக்காரர்களான ராண்டெல் அண்ட் பிரிட்ஜ்க்கு விற்கப்பட்டது .[4] ராண்டெல் அண்ட் பிரிட்ஜ் 1818 நிறுவனத்தால் வைரமானது மீண்டும் வெட்டி பட்டைத்தீட்டப்பட்டது,[5] அதன் பிறகு அது வெஸ்ட்மினிஸ்டரால் வாங்கப்பட்டது. அவர் தனது உடைவாளின் கைப்பிடியில் வைரத்தை பகட்டாக பதித்துக் கொண்டார்.[4]

விரைவான உண்மைகள் எடை, பரிமாணங்கள் ...

நாசக் வைரமானது 1927 இல் அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்தது. இது 1930 வாக்கில் உலகின் தலை சிறந்த 24 பெரிய வைரங்களில் ஒன்றாக கருதப்பட்டது.[4] அமெரிக்க நகை வணிகரான ஹாரி வின்ஸ்டன் 1940 இல் இந்த வைரத்தை வாங்கினார். பின்னர் அதை மேலும் பட்டைத் தீட்டினார். இதனால் இந்த வைரமானது 43.38 காரட்டுகள் (8.676 g) கொண்டதாக மாறியது.[3] அதன்பிறகு இந்த வைரமானது 1942 இல் நியூயார்க் நகை நிறுவனத்திற்கு விற்றார். பின்னர் கைமாறிய வைரமானது 1944 இல் நியூயார்கைச் சேர்ந்த திருமதி வில்லியம் பி. லீட்ஸ் என்பவருக்கு ஆறாவது ஆண்டு திருமணப் பரிசாக பெற்றார். அவர் அதை அதை ஒரு வளையத்தில் பதித்து அணிந்துகொண்டார்.[3] 1970இல் ஏலம் விடப்பட்ட இந்த வைரமானது 48 வயதான எட்வர்ட் ஹேண்ட் என்பவரால் வாங்கப்பட்டது.[6] தற்போது இந்த வைரமானது லெபனானில் உள்ள ஒரு தனியார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரிம்பகேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இந்த வைரத்தை மீட்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.[7]

Remove ads

மேலும் காண்க

குறிப்புகள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads