நாநார்த்த தீபிகை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாநார்த்த தீபிகை என்பது திருநெல்வேலியை சேர்ந்த முத்துசாமிப் பிள்ளை இயற்றிய, ஒரு சொல் பலபொருள் நிகண்டாகும் [1][2]

நூல் அமைப்பு

இந்நூல் 1102 விருத்தப் பாக்களைக் கொண்டுள்ளது, இதில் 5452 சொற்களுக்கு பொருள் விளக்கப்பட்டுள்ளது, இதில் வடசொற்களுக்கு விளக்கம் மிகுதியாக உள்ளது, இந்நூலுக்கு நூலாசிரியரின் மருமகனான சுவாமிநாதப் பிள்ளை என்பவர் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார்[1][2]

முதற்பதிப்பு

1936இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறை தலைவர் சு. அனவரதவிநாயகம் பிள்ளை இந்நூலைக்கு உரையெழுதிப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார் [1], இது 689 பக்கங்களைக் கொண்டது, இந்நூலுக்கு நூலாசிரியரின் மகன் சோமசுந்தரம் பிள்ளை கையால் எழுதிய காகித பிரதியே ஆதாரம் எனவும், ஆசிரியர் இந்நூலை பூர்த்தி செய்யாது சிறிது குறையாய் விட்டிருந்தாரோ என்றூகித்தற்கு நியாயஞ்சிலவுண்டு. 149வது செய்யுளில் பொருட்பிறழ்ச்சியும், 229, 382வது செய்யுள்கள் பொருள் தெளிவின்றியிருப்பதும் 159வது செய்யுளில் ஒரு சொல் ஒரு பொருளோடிருத்தலும், அவரம், ஏட்டை, கடமை, காயல், கிரந்தம், சீவநீ, நேயம், பிரதேசம், மைதுனம் என்னும் சொற்கள் இரண்டு இடங்களில் பொருளுரைக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியருக்குத் தாமியற்றிய செய்யுள்களை மீண்டும் நோக்கித் திருத்துவதற்கு அவகாசமில்லாது போயிற்றோ என்றும், செய்யுள்களில் சில, ஆசிரியர் வைத்துப்போன குறிப்புகளைக் கொண்டு பிறர் இயற்றியனவோ என்றும் சங்கையுறச் செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார் [2]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads