நானே வருவேன்
சிறீபிரியா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நானே வருவேன் (Naane Varuven) என்பது 1992 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிறீபிரியா இயக்கிய இப்படத்தை கிரிஜா தயாரித்தார். இப்படத்தில் ரகுமான், ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தனர். சசிகலா, வாகை சந்திரசேகர், வடிவுக்கரசி, கௌதமி, இராதிகா ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1979 இல் வெளிவந்த நீயா? என்ற திரைப்படத்தின் ஆன்மீகத் தொடர்ச்சியாகும். [2]இத்திரைப்படம் 1992 பெப்ரவரி 27 அன்று வெளியிடப்பட்டது.[3]
Remove ads
நடிகர்கள்
- ரகுமான் - இராஜா
- சிறீபிரியா - நாகராணி
- சசிகலா - பிரியா
- வாகை சந்திரசேகர் - சத்யா
- வடிவுக்கரசி - இலட்சமி
- கௌதமி - தங்கம்
- இராதிகா - மருத்துவர் இராதிகா
- இரா. சு. மனோகர் - துறவி - விருந்தினர் தோற்றம்
- சின்னி ஜெயந்த் - துறவியின் உதவியாளர்
- எஸ். எஸ். சந்திரன் - துறவியின் உதவியாளர்
- பி. ஆர். வரலட்சுமி - சத்யாவின் தாய்
- கோகிலா - ஜிப்சி
- ரம்யா கிருஷ்ணன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[4]
Remove ads
வரவேற்பு
தி இந்தியன் எக்ஸ்பிரஸின் என். கிருஷ்ணசாமி இவ்வாறு எழுதியிருந்தார். "கதைக்களம் ஒரு புராணப் படத்தைப் போல சிறிது நேரம் நகர்ந்தாலும், அது அப்பாதையை விட்டு வெளியேறி திரைக்கதையின் வியத்தகு உயரங்களை மேம்படுத்துவதற்காக" சிறந்த தொழில்நுட்ப மதிப்புகளை உருவாக்குகிறது. (புகைப்படம்:பிரசாத் பாபு) பின்னணி இசை (சங்கர் கணேஷ்) திரைக்கதை (ஸ்ரீபிரியா) .[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads