நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு சனவரி 3 இலிருந்து சனவரி 9 வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு வரிசையை ஆரம்பித்து வைத்திருந்தவரான அனைத்துலகத் தமிழாராய்ச்சிமன்றத்தின் தோற்றுநர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. யாழ் நகரம் சோடனைகளாலும், மின் அலங்காரங்களாலும், சப்புறங்களாலும் விழாக் கோலம் பூண்டிருந்தது.

மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற, அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் மாலையில் நடைபெற்றன.

Remove ads

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

  • ஓ யாழ்ப்பாணமே, 4வது தமிழாராய்ச்சி மாநாடு - ஒரு கண்ணோட்டம், மறவன்புலவு சச்சிதானந்தன்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads