நான் கண்ட சொர்க்கம்
சி. புல்லையா இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நான் கண்ட சொர்க்கம் என்பது 1960 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். சி. புல்லையா இயக்கி, தயாரித்த இத்திரைப்படத்தில் கே. ஏ. தங்கவேலு, சௌகார் ஜானகி பி. டி. சம்பந்தம், பி. வி. நரசிம்ம பாரதி ஆகியோர் நடித்திருந்தனர். இது 1958 ஆம் ஆண்டு வெளியான வங்கத் திரைப்படமான ஜமாலயே ஜிபந்த மனுஷ் படத்தின் மறுஆக்கம் ஆகும். மேலும் இது ஒரே நேரத்தில் தெலுங்கில் தேவந்தகுடு என்ற பெயரில் பெரிதும் மாறுபட்ட நடிகர்களைக் கொண்டு படமாக்கப்பட்டது. இந்த படம் 1960 ஆகத்து 12 அன்று வெளியாகி, வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
Remove ads
கதை
கோடீஸ்வரரும் கஞ்சருமான பரம பிள்ளையின் (ஆள்வார் குப்புசாமி) மகள் மீனாட்சி (சௌகார் ஜானகி) ஆவாள். பொது சேவையில் நாட்டம் உடையவள். ஆனால் அவளுடைய யோசனைகளை பரம பிள்ளை வெறுக்கிறார். நாடகக் கலைஞரான சுந்தர் (கே. ஏ. தங்கவேலு) நாடகத்தில் தனக்கு கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஏழை மக்களுக்கு வாரி வழங்குகிறார். சுந்தர் மீது மீனாட்சிக்கு காதல் வருகிறது. பரம பிள்ளைக்கு சுந்தரை பிடிக்கவில்லை. ஆனால் தந்தைக்குத் தெரியாமல், மீனாட்சி சுந்தரின் சமூக சேவைப் பணிகளுக்கு உதவுகிறாள். இந்த விசயத்தை அறிந்த பரம பிள்ளை, மீனாட்சியை வீட்டை விட்டு வெளியேறத் தடைசெய்து, அவளைப் பாதுகாக்க இரண்டு பாதுகாலவர்களை நியமிக்கிறார். சுந்தர், மீனாட்சி திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். மேலும் மீனாட்சியை வயதான கோடீசுவர மாப்பிளைக்கு திருணம் செய்விக்க ஏற்பாடு செய்கிறார்.
அங்கிருந்து தப்பிவித்து சுந்தர் மீனாட்சியைத் திருமணம் செய்துகொள்கிறார். பரம பிள்ளை தனது மகளைக் கண்டுபிடித்து அவளைப் பூட்டி வைத்து, சுந்தரை அடியாட்களை வைத்து கடுமையாக தாக்கி துன்புறுத்துகிறார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத மீனாட்சி திருமணமான ஒரே நாளில் தற்கொலை செய்து கொள்கிறாள். அதன் பிறகு பூமிக்கு வரும் எம கிங்கரர்கள் உடல் நிலை சரியில்லாத ஒருவரை கொண்டு செல்வதற்கு பதில் தவறுதலாக சுந்தரைக் கொண்டு செல்கின்றனர். எம லோகத்திற்கு சென்ற சுந்தர் அங்கு அளப்பரையில் ஈடுபடுகிறார். யமன், விஷ்ணு போன்ற பிற கடவுள்கள் மீனாட்சியும், சுந்தரும் மீண்டும் ஒன்று சேர எவ்வாறு உதவுகிறார்கள் என்பதை மீதிக் கதையாகும்.
Remove ads
நடிப்பு
- சுந்தராக கே. ஏ. தங்கவேலு
- மீனாட்சியாக சௌகார் ஜானகி
- பரம பிள்ளையாக ஆழ்வார் குப்புசுவாமி
- பரம பிள்ளையின் மனைவியாக எம். எஸ். சுந்தரி பாய்
- யமனாக எஸ். வி. ரங்கராவ்
- நாரதராக பி. வி. நரசிம்மபாரதி
தயாரிப்பு
நான் கண்ட சொர்கம் பார்கவி பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் சி. புல்லையா தயாரித்து இயக்கினார்.[1] இது 1958 ஆம் ஆண்டு பெங்காலித் திரைப்படமான ஜமாலயே ஜிபாண்டா மனுஷி என்ற படத்தின் மறுஆக்கம் ஆகும். மேலும் இது ஒரே நேரத்தில் தெலுங்கில் தேவந்தகுடு என்ற பெயரில் பெரிய அளவில் மாறுபட்ட நடிகர்களைக் கொண்டு படமாக்கப்பட்டது.[2] இப்படத்திற்கு கே. எஸ். கோபாலகிருஷ்ணன் உரையாடல் எழுதினார். பி. எஸ். லோகநாதனின் உதிவியாளராக நஞ்சப்பா ஒளிப்பதிவு செய்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விஜயா-வாஹினி ஸ்டுடியோவில் நடந்தது. இந்தப் படத்தில் ஜெமினி ராமமூர்த்தி நடனம் அமைத்த அப்சரா நடனக் காட்சி இடம்பெற்றது.[1]
இசை
இப்படத்திற்கு ஜி. அஸ்வத்தாமா இசையமைத்தார். பாடல் வரிகளை தஞ்சை என். ராமையா தாஸ், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், பார்த்திபன், டி. கே. சுந்தர வாத்யார் ஆகியோர் எழுதினர்.[3] இந்த படத்தில் "உஷா பரிணயம்" என்ற நடன நாடகம் இருந்தது, அதற்காக பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி ஆகியோர் குரல் கொடுத்தனர்.[1]
Remove ads
வெளியீடும் வரவேற்பும்
நான் கண்ட சொர்க்கம் 1960 ஆகத்து 12 அன்று வெளியானது.[4] "துணிச்சலான தயாரிப்பாளர்-இயக்குநர் சி. புல்லையாவால் தமிழ் மேதைமையின் சிறந்த மரபில் ஒரு நகைச்சுவைத் திரைப்படமாக நான் கண்ட சொர்கம் படத்தை திரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது" என்று இந்தியன் எக்சுபிரசு கூறியது.[5] கல்கியின் காந்தன் தங்கவேலுவின் நடிப்பைப் பாராட்டினார், அது சொர்க்கத்தின் உணர்வைத் தந்ததாகக் கூறினார்.[6] வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, இந்த படம் "முதன்மையாக அசாதாரண கதைக்களம் மற்றும் கற்பனை கூறுகள் காரணமாக" வணிக ரீதியாக வெற்றி பெற்றது என்றார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads