நாபாவான்

மலேசியா, சபா, நாபாவான் மாவட்டத்தின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia

நாபாவான்map
Remove ads

நாபாவான் என்பது (மலாய்: Pekan Nabawan; ஆங்கிலம்: Nabawan Town) மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, நாபாவான் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் நாபாவான் நகரம், நாடு ...

பெரும்பான்மையோர் பழங்குடி மூருட் மக்கள்; சிறுபான்மையோர் லுன் பாவாங் (Lun Bawang); லுன் டாயே (Lun Dayeh) பழங்குடி இனத்தவர்கள்.

Remove ads

பொது

நாபாவான் மாவட்டம் 6.089 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்த மாவட்டம் சபாவின் தெற்குப் பகுதியில் அமைந்து உள்ளது.

இதன் வடக்கில் கெனிங்காவ் மாவட்டம்; வடகிழக்கில் தொங்கோட் மாவட்டம்; கிழக்கில் தாவாவ் மாவட்டம், மேற்கில் தெனோம் மாவட்டம் மற்றும் இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தான் மாநிலம் உள்ளன.

நாபாவான் மாவட்டம்

நாபாவான் மாவட்டம் 1920-ஆம் ஆண்டில் ஒரு சிறிய மாவட்டமாகத் தொடங்கியது. பணிபுரிந்த முதல் உதவி மாவட்ட அலுவலர் திரு. ஐ.சி பெக் (I.C Peck).[1]

இங்கு பழைமையான கற்பாறைக் குன்று உள்ளது. அதன் பெயர் பத்து புங்குல் (Batu Punggul). பழங்காலத்தில், மூருட் பழங்குடி மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 120 மீட்டர் உயரம்; 68 மீட்டர் அகலம் கொண்டது.

பத்து புங்குல்

இந்தக் குன்று செபுலுட் ஆற்றுப் பகுதியின் நடுவில் அமைந்து உள்ளது. அதைச் சுற்றிலும் பல குகைகள் உள்ளன.

நாபாவான் பகுதி வெப்ப மண்டலக் காடுகளுக்குப் பெயர் பெற்ற இடமாகும். அண்மைய காலங்களில் அதிகமான அளவில் காட்டு மரங்கள் வெட்டப் படுகின்றன.[2]

Remove ads

காட்சியகம்

வெளி இணைப்புகள்

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads