நாமக ( நிலவு )
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாமக (Namaka) என்பது அவுமியா குறுங்கோளின் உட்புறநிலவு ஆகும். இப்பெயர் அவாய் மொழியின் தொன்மவியலில் கூறப்பட்டுள்ள கடல் தேவதையின் பெயராக உள்ளது. மேலும், அவுமியாவின் பெண் குழந்தைகளுள் ஒருத்தியின் பெயரும் நாமகவாகும்.
Remove ads
கண்டுபிடிப்பு
2005 ஆம் ஆண்டு சூன் மாதம் நாமக கண்டறியப்பட்டது. ஆனால் அதே ஆண்டு நவம்பர் 29 அன்றுதான் முறையாக அறிவிக்கப்பட்டது. முறையான பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு கண்டுபிடிப்பு குழுவினர் இக்குறுங்கோளை பிளிட்சன் என்ற அடை பெயரால் அழைத்தனர்.[3]
நிலத்திணைப் பண்புகள்
நாமக அதன் தாய்க் குறுங்கோளான அவுமியாவைப் போல 1.5 சதவீதம் பிரகாசமாகவும் அதன் நிறையில் 0.5 சதவீதமும் கொண்டுள்ளது. ஒருவேளை அவுமியா குறுங்கோளின் எதிரொளிப்புத் திறனைப் பெற்றால் அதன் விட்டம் 170 கிலோமீட்டர்களாக இருக்கும்.[2] இதனுடைய மேற்பரப்பு நீர் பனிபடலமாக இருப்பதாக ஒளிஅளவையியல் கண்காணிப்புகள் தெரிவிக்கின்றன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads