நாம ஜெபம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாம ஜெபம் அல்லது நாம சங்கீர்த்தனம் (Nama Japam or Nama Sankeertanam) என்பது இறைவனின் திருப்பெயரை மனதில் இருத்தி தொடர்ந்து ஜெபித்தலாகும். நாம ஜெபம் செய்வதற்கு நேரம், காலம், இடம் இல்லை. எப்பொழுது வேண்டுமானலும், எங்கு வேண்டுமானாலும் இறைவனின் திருப்பெயரை மனதார ஜெபிக்கலாம். ஆன்மீக சாதகர்கள் தங்களது இஷ்டமான இறைவனை அல்லது இஷ்டதேவதை அல்லது குல தெய்வத்தின் பெயரை மனதார ஜெபிக்கலாம். பக்தி இயக்கத்தின் போது பல சைவ மற்றும் வைண சமய அடியார்கள் பகவானின் திருப்பெயர்களை ஜெபம் செய்தலே மோட்சத்திற்கான பாதை என வலியுறுத்தினர்.
Remove ads
நாம சங்கீர்த்தனம்
நாம சங்கீர்த்தனம் என்பது ஆன்மீக சாதகர்கள் ஒன்று கூடி, இறைவனின் திருப்பெயர்கள், மகிமைகள், பெருமைகள், கல்யாண குணங்கள் குறித்து இசையுடன் கூட்டு வழிபாடு செய்வதாகும்.
பயன்கள்
- பிறவிச்சுழற்சியிலிருந்து விடுபட விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஜெபித்தல் நல்லது என பீஷ்மர் கூறுகிறார்.[1]
- அத்வைத தத்துவ நிறுவனர் ஆதிசங்கரர் இயற்றிய பஜ கோவிந்தம் நூலின் 27வது பாடலில்[2]பகவத் கீதை மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை அன்றாடம் ஜெபிப்பவர்களுக்கு இலக்குமி-நாராயணன் அருள் கிடைக்கும் என்கிறார்.[3]
- பகவத் கீதையில், பகவான் கிருஷ்ணன், தனது திருப்பெயர்களையும், கல்யாண குணங்களையும் ஜெபிப்பவர்கள் மனதில் உறைவதாக கூறுகிறார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads