பக்தி இயக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பக்தி இயக்கம், பல்லவர்களின் ஆட்சிக் காலமான கி பி 600 முதல் 900 முடிய உள்ள காலத்தில், தமிழகத்தில், தழைத்தோங்கிருந்த சமணம் மற்றும் பௌத்த சமயக் கருத்துக்களை எதிர்த்து வளர்ந்தது இந்து சமய பக்தி இயக்கம். இக்கால கட்டத்தில் நாயன்மார்கள் ஆழ்வார்கள், தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் மற்றும் கம்பராமாயணம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற சைவ மற்றும் வைண சமய பக்தி இலக்கிய நூல்களை இயற்றினர். பெருமளவில் சமண மற்றும் பௌத்த சமயத்திற்கு மாறியவர்கள் மீண்டும் தாய்ச் சமயமான சைவ மற்றும் வைணவ சமயத்திற்கு மாறினர். பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் பக்தி இயக்கம் உச்ச கட்டத்தை நோக்கிச் சென்றது. சமண, பௌத்த தத்துவக் கருத்துக்களுக்கு எதிரான வாதப் போரில் சைவர்கள் வென்றனர். பக்தி இயக்கத்தின் விளைவாக சைவமும், வைணவமும் தழைத்ததால், தமிழ்நாட்டில் புறச்சமயங்களான பௌத்தமும், சமணமும் மறைந்தது. பக்தி இயக்கத்தால் தமிழ் பக்தி இலக்கியங்கள் மலர்ச்சியடைந்தது. மேலும் தமிழ் நாடெங்கும் சைவ, வைணவக் கோயில்கள் எழுப்பப்பட்டது. [1]
Remove ads
இந்திய அளவில் பக்தி இயக்கம்

வட இந்தியாவில் முகலாயர் காலத்தில்தான் பக்தி இயக்கம் தோன்றியது. இருப்பினும் கி பி எட்டாம் நூற்றாண்டு முதல் ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர், சைதன்யர், மீராபாய், மற்றும் நிம்பர்க்கர் போன்றவர்களின் முயற்சியால், மக்கள் பௌத்த, சமண கருத்துகளிலிருந்து விடுபட்டு, இந்து சமயத்திற்கு திரும்பினர். முகலாயர்களின் இந்து சமய எதிர்ப்புக் கொள்கையால் குரு நானக் போன்றவர்களால் சீக்கிய சமயம் உருவானது.
பக்தியை வளர்த்த கவிஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் பாடகர்கள்
இந்திய வட்டார மொழிகளில் இசையுடன் கூடிய பக்திப் பாடல்கள் இந்து பக்தி இலக்கியங்களை வளர்த்தெடுத்தன.[3][4]இவற்றுள் ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ஆண்டாள், [5] பசவர்,[6] பகத் பீபா,[7] அல்லாமா பிரபு, அக்கமகாதேவி, கபீர், குரு நானக் [6] துளசிதாசர், ஞானானந்தர்,[5] இராமாநந்தர் [8] ரவிதாசர்,[6] ஜெயதேவர்,[5] நாமதேவர்,[6] துக்காராம் மற்றும் மீராபாய், இராமப்பிரசாத் சென்,[9] சங்கர்தேவ்,[10] வல்லபர், சைதன்யர்[6] நரசிங் மேத்தா,[11] கங்காசாதீ[12] போன்றவர்கள் பாடிய பக்திப் பாடல்களும் அடங்கும்.
கி பி ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு முடிய பக்தி இயக்க இலக்கியத்தின் ஆணி வேராக விளங்கிய புனிதர்களான திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அப்பர், சுந்தரர், நம்மாழ்வார், ஆதிசங்கரர், நாதமுனிகள், வித்யாரண்யர், வல்லபர், நிம்பர்க்கர் மற்றும் தியாகராஜர் போன்றோர் சிறந்த பக்திப் பாடல்களை எழுதிய எழுத்தாள கவிஞர்களும் ஆவர்.[5][13]
Remove ads
தற்கால பக்தி இயக்கங்கள்
- கிருஷ்ண பக்தியை பரப்பும் நோக்கில் இந்தியாவிலும், மற்ற உலக நாடுகளிலும் கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் அழகான கிருஷ்ணர் கோயில்களை நிறுவியுள்ளனர்.
- சுவாமிநாராயண் இயக்கத்தினரும் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் சுவாமிநாராயண் கோயில்களை நிறுவி நர-நாராயணர்களின் பெருமைகளையும், மகிமைகளையும் பரப்புகின்றனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads