நாவிதர்

"நாவிதர்" அல்லது "அம்பட்டன்" என்ற பெயர் ஒரு தமிழ் வார்த்தையாகும், இது முதலில் சமசுகிருத வார்த்த From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாவிதர் (பொதுவாக அம்பட்டன் மற்றும் மருத்துவர் என்றும் அழைக்கப்படுகின்றனர்)[1] எனப்படுபவர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். தமிழகத்தில், நாவிதர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர். தெலுங்கு பேசும் நாவிதர்கள் மங்களா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர்.[2] [3] இவர்கள் கிராமப்புற மருத்துவர்களாகவும்,[4] ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

விரைவான உண்மைகள் நாவிதர் அல்லது அம்பட்டன், வகைப்பாடு ...
Remove ads

சொற்பிறப்பு

அம்பட்டன் என்ற பெயர் ஒரு தமிழ் வார்த்தையாகும், இது முதலில் சமசுகிருத வார்த்தையான அம்பாஸ்தா என்னும் வார்த்தையிலிருந்து வந்தது.[5] இந்த வார்த்தை இரண்டு சமசுகிருத வார்த்தைகளான அம்பா என்பது "அருகில்" என்றும், ஸ்தா என்பது "நிற்க" என்றும் பொருள்படும். இந்த பொருளானது "அருகில் நின்று முடிதிருத்தும் ஒருவரை" குறிக்கிறது.[6]

நாவிதர் என்ற சொல் நாவிகர் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது, இதற்கு புனித மனிதன் என்று பொருளாகும். இவர்கள் மருத்துவர், பரியாரி, வைத்தியர் என்ற பெயராலும் அறியப்படுகின்றனர். இவை அனைத்தும் மருத்துவர்களுக்கான ஒத்த சொற்கள் ஆகும்.[7][8]

Remove ads

மக்கள்தொகை

தமிழகத்தில் மருத்துவர், நாவிதர், மங்களா, அம்பட்டர் என்று சொல்லப்படுகின்ற வகுப்பினர் 4 லட்சத்து 26 ஆயிரத்து 427 பேர் வசிக்கின்றனர்.[9] [தொடர்பிழந்த இணைப்பு][சான்று தேவை] இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

வரலாற்றுத் தகவல்

வட இந்தியச் சரித்திரகால அரசர்களில் "நந்தர்கள்" சூத்திரராகக் கருதப்படுகின்றனர். நந்தர்களைப் "அம்பஷ்டன்" (நாவிதர்) என அழைக்கும் வழக்கமும் உள்ளது.[10]

ஆரம்பகால தமிழ் வரலாறு

சித்தி பெற்றதாகக் கூறும் பண்டைய தமிழ் மருத்துவர்களான சித்தர்கள், பெரும்பாலும் அம்பட்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.[11]

இலங்கை

இலங்கை அம்பட்டாரின் நாட்டுப்புறக் கதைகளின்படி, அவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்திற்கு போர்வீரர்களின் உதவியாளர்களாக வந்தனர். அவர்கள் தங்கள் மனைவிகள் இல்லாமல் வந்ததால், அவர்கள் இலங்கை வெள்ளாளர் பெண்களை மணந்தனர்.[12]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads