நா. காசிராமன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாராயண காசிராமன் (N. Kasiraman) இந்தியாவைச் சேர்ந்த ஒர் அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் புத்தகரம் கிராமத்தில் பிறந்தார். காசிராமன், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் கல்லூரிப் படிப்பினை முடித்தார். கும்பகோணம் சட்ட மன்றத் தொகுதிக்கு 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
காசிராமன் கும்பகோணத்தில் பி.எசு.நாராயண ஐயருக்கு மகனாகப் பிறந்தார். நாராயண ஐயர் ஒரு போக்குவரத்து தொழிலதிபர் மற்றும் நகரத்தின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமான ராமன் மற்றும் ராமன் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். காசிராமன் ஏப்ரல் 11, 1999 அன்று இறந்தார்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads