தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாட்டின் ஐந்தாவது சட்டமன்றத் தேர்தல் 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றி பெற்று, மு. கருணாநிதி இரண்டாவது முறை தமிழகத்தின் முதல்வரானார்.
Remove ads
தொகுதிகள்
1971 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]
அரசியல் நிலவரம்
- 1967 ஆம் ஆண்டு முதல்முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார்.
- முந்தைய தேர்தல் வரை திமுகவை எதிர்த்து விமர்சனம் செய்து வந்த பெரியார் ஈ. வே. ராமசாமி அவர்கள் திமுகவில் அண்ணா வெற்றி பெற்ற பிறகும் அவர் இறப்பிற்கு பிறகு மு. கருணாநிதி திமுகவில் முதல்வராக பொறுப்பேற்ற பிறகும் திராவிடர் கழகம் இத்தேர்தல் வரை திமுகவை ஆதரித்தது.
- மத்தியில் இந்திய தேசிய காங்கிரசு 1969 ஆம் ஆண்டு பிளவு பட்டது. மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர் கட்சியிலிருந்து விலகபட்டவுடன் இந்திய தேசிய காங்கிரசு இரண்டாக பிளவுபட்டது.
- இதனால் இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்திரா காங்கிரஸ் அல்லது ரிகவசிஷன் காங்கிரஸ் என்று ஒரு பிரிவினரும்.
- மொரார்ஜி தேசாய், காமராஜர் பிரிவினர் நிறுவன காங்கிரஸ் என்ற பெயரில் ஒரு பிரிவினராக செயல்பட்டுவந்தனர்.
- தமிழகத்தில் காமராஜர் ஆதிக்கத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகியதால்.
- காமராஜர் மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையில் மத்தியில் புதிதாக உருவாகிய நிறுவன காங்கிரசின் கை தமிழகத்தில் ஓங்கி காணப்பட்டது.
- அதனால் சி. சுப்ரமணியத்தின் தலைமையில் செயல்பட்ட தமிழக இந்திரா காங்கிரசு பலவீனமாகவே இருந்தது.
- 1967 இல் திமுக கூட்டணியில் இருந்த ராஜகோபாலாச்சாரியின் சுதந்திராக் கட்சி, மதுவிலக்கை திமுக அரசு தளர்த்தியதால், திமுக கூட்டணியில் இருந்து விலகியது.
- மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், ம. பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகம், ஃபார்வார்டு ப்ளாக், சி. பா ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, அம்பேத்கரின் குடியரசுக் கட்சி, பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.
Remove ads
கூட்டணி
- திமுகவில் அண்ணா இறப்பிற்கு பிறகு மு. கருணாநிதி அவர்கள் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முதல்வராக மு. கருணாநிதி அவர்கள் பொறுப்பெற்று கொண்டதை எதிர்கட்சியில் விமர்சிக்கபட்டதால்.
- 1971 ஆம் ஆண்டு மு. கருணாநிதி அவர்கள் தனது ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே தான் வகித்து வந்த முதலைமைச்சர் பதவியில் இருந்து தாமாகவே விலகி தாம் மீது மக்களிடையே நம்பிக்கையை பெறுவதற்கு அதிகார பூர்வமாக தனது ஆட்சியை கலைத்துவிட்டு இச்சட்டமன்ற தேர்தலை சந்தித்தார்.
- திமுகவின் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, முஸ்லீம் லீக், ஃபார்வார்டு ப்ளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சொஷ்யலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன.
- திமுகவில் அண்ணா இருக்கும் வரை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அண்ணா இறப்பிற்க்கு பிறகு முதலமைச்சர் பதவியில் இருந்த மு. கருணாநிதி அவர்கள் தனது திமுக கொள்கைக்கும், திராவிட சித்தாந்ததிற்க்கும் எதிரான கொள்கை உடைய மத்திய காங்கிரஸ் உடன் 1971 ஆம் ஆண்டு நடந்த நாடாளமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. இதில் திமுக-காங்கிரஸ்க்கு 9 தொகுதிகள் வழங்கியது.
- மேலும் அப்போது பெரியார் தனது திராவிடர் கழகம் வாயிலாக திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலமான எதிர்ப்பு பிரச்சாரங்கள் செய்தும் பலமான விமர்சனங்களும் செய்து வந்ததால். திமுக இம்முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிட்டது.
- பெரியார் திமுக-காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து கடுமையான விமர்சனங்களால் தமிழகத்தில் காட்டமாக விமர்சித்துவந்ததால். காங்கிரஸ் இம்முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
- திமுகவிற்கு எதிராக நிறுவன காங்கிரசு, சுதந்திரா கட்சி, சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசு கழகம், குடியரசு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
- இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாரதிய ஜன சங்கம் போன்ற கட்சிகள் எந்த ஒரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தது.
தேர்தல் முடிவுகள்
தேர்தல் தேதி – 03 ஜனவரி 1971 ; மொத்தம் 71 % வாக்குகள் பதிவாகின. கட்சிகள் பெற்ற வாக்குகளும் வென்ற இடங்களும்:[2]
Remove ads
ஆட்சி அமைப்பு
இன்று வரை, தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒரு தனி கட்சி வென்ற மிக அதிக இடங்கள், இந்த தேர்தலில் திமுக வென்றது தான். இத்தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று, மு. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். 1971 இல் அவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள்.[3]
Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads