நிகார் சாஜி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிகார் சாஜி (Nigar Shaji) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய விண்வெளி அறிவியலாளர் ஆவார். இவர் ஆதித்யா - எல் 1 இன் திட்ட இயக்குநராக உள்ளார். இந்தியாவின் முதல் சூரிய திட்டமான இது 2023, செப்டம்பர் 2 அன்று காலை 11:50 மணிக்கு வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.[1][2][3][4][5]
நிகர் சுல்தானா என்ற பெயரில் ஒரு முசுலீம் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை சேக் மீரான் ஓர் உழவராவார். தாய் சித்தூன் பீவி ஒரு இல்லத்தரசி ஆவார்.[2] எஸ். ஆர். எம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலத்தில் அடிப்படைக் கல்வியைப் பெற்றார்.[3] திருநெல்வேலி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரியில் பயின்று, அங்கு மின்னணுவியல், தகவல்தொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.[2]
1987 ஆம் ஆண்டில் யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இசுரோ) சாஜி சேர்ந்தார்.[2] இவர் பல செயற்கைக்கோள் திட்டங்களில் பணியாற்றியுள்ளார் மற்றும் வளக்கோள் - 2ஏ இன் இணை திட்ட இயக்குநராக இருந்தார்.[2][6]
நிகர் சாஜி தனது தாய், மகளுடன் பெங்களூரில் வசிக்கிறார்.[2][7][8] இவரது கணவர் துபாயில் பணிபுரிகிறார். அவரது மகன் நெதர்லாந்தில் ஓர் அறிவியலாளர் ஆவார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads