நிக்கொலாய் கர்தசோவ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிக்கொலாய் செமனோவிச் கர்தசோவ் (Nikolai Semenovich Kardashev, உருசியம்: Никола́й Семёнович Кардашёв, ஏப்ரல் 25, 1932 – 3 ஆகத்து 2019[1]) சோவியத் ஒன்றிய, உருசிய வானியலாளர் ஆவார். இவர் இயற்பியலிலும் கணிதவியலிலும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் மாஸ்கோவில் உள்ள உருசிய அறிவியல் கல்விக்கழக, பி. என். இலெபெதோவ் இயற்பியல் நிறுவனத்தின் உருசிய விண்வெளி மையத்தில் இணை இயக்குநராக இருந்தார்.

விரைவான உண்மைகள் நிக்கொலாய் கர்தசோவ்Nikolai Kardashev, பிறப்பு ...

இவர் 1955 இல் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் [[சுட்டெர்ன்பர்கு வானியல் நிறுவனத்தில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் அயோசிப் சாமுயிலோவிச் சுக்கிலோவ்சுகியின் கீழ் பயின்று 1960 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் 1963 இல் குவாசார் சிடிஏ-102 ஐ ஆய்வு செய்தார். இவர் தான் சோவியத் ஒன்றியத்தில் முதன்முதலில் புவிக்கப்பாலான அறிதிறன் (சேதி) (SETI) ஆய்வில் ஈடுபட்டார். இவர் தன் ஆய்வில் சில பால்வெளி நாகரிகங்கள் நம்மைவிட பல பில்லியன் ஆண்டு காலம் முந்தியவை என்ற முடிவுக்கு வந்தார்,அத்தகைய நாகரிகங்களைத் தரம்பிரிக்கும் கர்தழ்சேவ் அளவுகோலை உருவாக்கினார். ஆற்ரல் நுகர்வைப் பொறுத்து மூன்று மட்டங்களாக அந்நாகரிகங்களைப் பகுத்தார்: அதில் வகை ஒன்று, புவிபோன்ற ஏறத்தாழ, 4×1019 எர்க்/செக் (4 × 1012 வாட்) அளவுக்கு ஆற்றல் நுகர்வுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட கோள்வாழ்க்கை நாகரிகம் ஆகும். அதில் வகை இரண்டு, தன் சூரிய ஆற்றலைப் பதப்படுத்தும் அளவுக்கு திறம்வாய்ந்த நாகரிகம் ஆகும். அதில் வகை மூன்று, தன் பால்வெளியளவு ஆற்றலைப் பயன்படுத்தும் நாகரிகம் ஆகும்.[2]

அமெரிக்கச் சேதி திட்டங்களை விட சீரிய உருசியச் சேதி திட்ட முயற்சிகள் சில ஆண்டுகல் முந்தியதாகும் என்பது இங்கே குறிப்பிட்த்தக்கது. இத்துறை சார்ந்த பிற சோவியத வல்லுனர்களாக விசேவோலோத் திராய்த்சுகியும் அயோசிப் சாமுயிலோவிச் சுக்கிலோவ்சுகியும் (இவர் கரதழ்சேவின் முன்னாள் பேராசிரியர்) திகழ்கின்றனர்.

இவர் 1976 திசம்பர் 12 இல் சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக்கழகத்தின் பொது இயற்பியல், வானியல் பிரிவின் இணை உறுப்பினராகத் தேர்வு ஆனார். இவர் உருசியக் கல்விக்கழகத்தின் முழு உறுப்பினராக 1994 மார்ச்சு 21 இல் தேர்வானார். மேலும் 2014 இல் தெமிதோவ் பரிசும் பெற்றுள்ளார்.[3]

Remove ads

வெளியீடுகள்

  • Kardashev, Nikolai (1985). "On the Inevitability and the Possible Structures of Supercivilizations" in "The search for extraterrestrial life: Recent developments; Proceedings of the Symposium, Boston, MA,June 18–21, 1984". pp. 497–504. Bibcode:1985IAUS..112..497K.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads