நிசாத் குமார்
இந்திய இணை ஒலிம்பிக் தடகள வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிசாத் குமார் (பிறப்பு: 3 அக்டோபர் 1999) இந்திய இணைஒலிம்பிக் உயரம் தாண்டுதல் விளையாட்டு வீரர்.[1] இவர் இணை ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக 2020 தோக்கியோவில் கலந்துகொண்டு T47 நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்; இவர் தாண்டிய உயரம் 2.06 மீ ஆசிய சாதனையாக அமைந்தது.[2][3][4] மேலும் 2024 ஆண்டு பாரிசில் நடந்த கோடைகால இணை ஒலிம்பிக் தனது வெள்ளிப் பதக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.[5]
Remove ads
வாழ்க்கை வரலாறு
நிசாத் இமாச்சலப் பிரதேசத்தின் உனா நகரைச் சேர்ந்தவர். தனது எட்டாவது அகவையில் விபத்தொன்றில் வலது கையை இழந்தார்.[6] முன்னதாக 2021இல் கோவிடு பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு நோயிலிருந்து மீண்டார்.[7]லவ்லி புரொபசனல் பல்கலைக்கழகத்தில்உயர்கல்வி பயின்றார்.[8]
விளையாட்டு வாழ்வு
2009இல் நிசாத் குமார் இணை ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகத் தொடங்கினார். நவம்பர் 2019இல் துபாயில் நடந்த உலக இணை தடகளப் போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் T47 வகைப்பாட்டில் போட்டியிட்டு மூன்றாமிடத்தில் வெங்கலப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியானது 2020 கோடை இணை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை வழங்கியது.[9]
2020 இணை ஒலிம்பிக் போட்டியில் தமது வெள்ளிப் பதக்கத்தை ஐக்கிய அமெரிக்காவின் டல்லசு வைசு என்ற வீரருடன் இணைந்து வென்றுள்ளார். இருவரும் ஒரே உயரமான 2.06 மீ தாண்டியுள்ளனர்.[6][10][11]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads