நிசாம்பட்டிணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிசாம்ம்பட்டிணம் (Nizampatnam) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இது தெனாலி வருவாய் பிரிவில் நிசாம்பட்டிணம் வட்டத்தின் தலைமையகமுமாகும். 1606 முதல்1668 வரை வர்த்தகத்திற்காக டச்சுக்காரர்கள் ஆக்கிரமிப்பில் நகரம் இருந்தது.

விரைவான உண்மைகள் நிசாம்பட்டிணம் பெத்தபோலி அல்லது பெத்தபள்ளி, நாடு ...
Remove ads

சொற்பிறப்பியல்

இந்நகரத்திற்கு ஐதராபாத்து நிசாமின் பெயரிடப்பட்டது. மேலும், பெத்தப்பள்ளி எனவும் அழைக்கப்படுகிறது.[4] இது டச்சுகாரர்களாலும் [5] பிரித்தானியர்களாலும் "பெத்தபோலி" அல்லது "பெத்தபள்ளி" என்றும் அழைக்கப்பட்டது .[6]

வரலாறு

இது ஒரு பழங்கால கப்பல் தளமாகும். இது பொது ஊழி 12-13 ஆம் நூற்றாண்டில் வேலநாட்டி சோடர்கள்களால் ஆளப்பட்டது. பின்னர், இது கோல்கொண்டா இராச்சியத்தின் கீழ் இருந்தது.[7] பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 1621ஆம் ஆண்டில் இங்கு ஒரு கைத்தறி துனி தொழிற்சாலையை நிறுவியது. இது 1687ஆம் ஆண்டில் புனித ஜார்ஜ் கோட்டைக்கு கீழான அனைத்து தொழிற்சாலைகளும் திரும்பப் பெறப்பட்டபோது மூடப்பட்டது.[8]

புள்ளிவிவரங்கள்

2001 இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி [3], நிசாம்பட்டிணத்தின் மக்கள் தொகையில் 10,623 ஆண்களும் 10,359 பெண்களும் என 20,982 என இருந்தனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 975 பெண்கள். 2,105 குழந்தைகள் 0–6 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் 1,073 சிறுவர்களும் 1,032 சிறுமிகளும் ஆவர். 1000 க்கு 962 என்ற விகிதம். சராசரி கல்வியறிவு விகிதம் 68.78% ஆக உள்ளது. 12,984 கல்வியாளர்கள். இது மாநில சராசரியான 67.41 ஐ விட சற்றே அதிகம் %.[9]

நிர்வாகம்

நிசாம்பட்டிணம் ஒரு கிராம ஊராட்சியாகும். இது வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டும் ஒரு வார்டு உறுப்பினரைக் கொண்டுள்ளது.[10]

நிசாம்பட்டிணம் பாபட்ல மக்களவைத் தொகுதி மற்றும் ரேபள்ளே சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது.[11][12]

கோயில்

சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையான கோகர்ணேசுவர் கோயில் இங்கு அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் பிரமாண்டமான முறையில் நடத்தப்படுகிறது.

கல்வி

2018–19 கல்வியாண்டிற்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் ஒரு அரசுப் பள்ளி உட்பட மொத்தம் 31 பள்ளிகள் உள்ளன.[13]

பொருளாதாரம்

மக்களின் முக்கிய தொழில் விவசாயமாகும். இதில் நெல் முக்கியச் சாகுபடியாக இருக்கிறது.[14] இதன் அருகே கடற்கரை அமைந்துள்ளதால் மீன்பிடித்தலும் ஒரு பிரதானத் தொழிலாக உள்ளது. கிராமத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சதுப்புநில காடுகளும் உப்பங்கழிகளும் இங்கு அமைந்துள்ளன.[15]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads