நித்தீசு ராணா

இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நித்தீசு ராணா (Nitish Rana பிறப்பு: 27 டிசம்பர் 1993) ஓர் இந்திய முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டு துடுப்பாட்டத்தில் தில்லி அணிக்காக விளையாடுகிறார். பன்முக வீரரான இவர் இடது கை மட்டையாளராகவும் வலது கை எதிர்ச்சுழல் பந்து வீச்சாளராகவும் விளையாடுகிறார். இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கொல்கத்தா நைட் ரைடர்சு அணிக்காக விளையாடுகிறார். [1] [2]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

உள்நாட்டுத் துடுப்பாட்டம்

ராணா 2015–16 ரஞ்சி கோப்பையில் தனது முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார், அந்த போட்டித் தொடரில் 557 ஓட்டங்கள் 50.63 சராசரியில் எடுத்தார். மேலும் தில்லி துடுப்பாட்ட அணியில் அதிக ஓட்டங்கள் இவருடையது ஆகும். [3] 2015–16 விஜய் ஹசாரே கோப்பையில் 218 ஓட்டங்களுடன் அணியின் இரண்டாவது அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக இருந்தார். [4]

2018 சனவரி 2018 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இவரை ஏலத்திலில் எடுத்தது அதன் முதல் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். [5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads