நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு (Appointments Committee of the Cabinet) இந்திய அரசின் முக்கியப் பதவிகளுக்கான நியமனங்களை முடிவு செய்யும் குழுவாகும். இக்குழுவில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் உள்ளனர். முன்னர், பொறுப்பு அமைச்சர்களும் இக்குழுவில் இருந்தனர். ஆனால், புதிய அறிவிப்பிற்குப் பின்னர் (14 ஜூலை 2016) அவர்கள் இக்குழுவில் அங்கம் வகிக்கவில்லை.[1]
இந்திய அரசின் 1961 வர்த்தகப் பரிவர்த்தனை விதிகளின்படி, அனைத்து முக்கிய நியமனங்களுக்கும் இக்குழு ஒப்புதல் அளிக்கவேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் மேல்மட்டக் குழு நியமனத்திற்கும் இக்குழுவின் ஒப்புதல் வேண்டும். மத்தியப் புலனாய்வுத் துறை இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், மத்திய கண்காணிப்பு ஆணையச் செயலாளர், பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் போன்றவை இக்குழுவின் ஒப்புதல் தேவைப்படும் சில பதவிகளாகும்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads