நியூயார்க் நகர சப்வே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியூயார்க் நகர சப்வே என்பது உள்ளூர் பகுதிகளை இணைக்கும் தொடருந்து சேவையாகும். நியூயார்க் நகருக்கு சொந்தமான இது நியூயார்க் நகர போக்குவரத்து அமைப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. நியூயார்க் நகர போக்குவரத்து அமைப்பு ஓர் துணை அமைப்பை உருவாக்கி சப்வே-ஐ இயக்குகிறது. இது உலகின் மிகப்பழைமையான பெரிய பொது போக்குவரத்து அமைப்பாகும். இதில் 468 நிறுத்தங்கள் இயக்கத்திலுள்ளன. 2009ல் இதில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 1,579,866,600 ஆகும். தோராயமாக வாரநாட்களில் 5 மில்லியன் பயணிகளும், சனிக்கிழமைகளில் தோராயமாக 2.9 மில்லியன் பயணிகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் தோராயமாக 2.3 மில்லியன் பயணிகளும் பயணித்தார்கள்.
டோக்கியோ, மாசுகோ, சியோல் நகர மெட்ரோ அமைப்புகளில் நியூ யார்க் நகர சப்வேவை விட ஆண்டுக்கு அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணிக்கிறார்கள்.
சப்வே நிறுத்தங்கள் நியூ யார்க் நகரம் முழுவதும் உள்ளன. இதன் 468 நிறுத்தங்களில் இரண்டை தவிர அனைத்தும் 24 மணி நேரமும் பயன்பாட்டில் உள்ளவை.
2005ல் இதன் பயன்பாடு உச்சத்தை தொட்டது, அப்போது அதன் பயணித்தவர்களின் எண்ணிக்கை 1.45 பில்லியன் ஆகும். 2008வரை அதிக பயணிகள் சப்வேயை பயன்படுத்தும் போக்கு தொடர்ந்தது. 2008ம் ஆண்டின் சனவரி முதல் பிப்ரவரி வரையான காலகட்டத்தில் சப்வே-ஐ பயன்படுத்தியோர் எண்ணிக்கை 6.8 விழுக்காடு அதிகரித்தது. இதற்கு காரணம் அப்போதிருந்த அதிகபடியான எரிபொருள் விலை ஆகும்.
அமெரிக்க ஆற்றல் துறையின் அறிக்கை 1955ல் படி சப்வே பெட்டிகளின் மூலம் வெளிப்பட்ட ஆற்றல் மைலுக்கு பயணிக்கு 3492 பிவெஅ ஆகும். இதுவே தானுந்துகளில் மைலுக்கு பயணிக்கு 3702 பிவெஅ ஆகும். இது அமெரிக்கா முழுவதற்கும் ஆன தானுந்தின் சராசரி அளவாகும். நியூயார்க் நகரில் தானுந்துகளை ஓட்டும் போது அது நகர் பகுதி என்பதால் ஆற்றல் குறைவாக இருக்கும்.
இதன் தடங்கள் மூன்று அல்லது நான்கு தண்டவாளங்களை கொண்டிருக்கும். பொதுவாக வெளிப்புறமுள்ள இரண்டும் அனைத்து நிறுத்த வண்டிகளாலும் உள்புறமுள்ள தண்டவாளம் விரைவு வண்டிகளாலும் பயன்படுத்தப்படும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads